சூட்கேசில் ஒளிந்து வந்தவர் கைது (படம் இணைப்பு)
அமெரிக்காவின் ஓரேகான் மாநிலம், போர்ட்லாண்ட் நகரில் ஆண்களுக்கான விடுதியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அதில் வசிப்பவர் கர்டிஸ் லா. வயது 52.
அவர் தினமும் பெரிய சூட்கேசுடன் சிரமப்பட்டு வந்து செல்வதை சிலர் கவனித்தனர். சூட்கேசுக்குள் அசைவுகள் தெரியவே, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கர்டிசின் வீட்டில் சோதனை போட்டனர். அப்போது அலமாரி ஒன்றில் மறைந்திருந்த பெண்ணை கண்டுபிடித்தனர்.
அவர் பெயர் கோலா மெக்ரத். கர்டிசின் காதலியான அவர், ஆண்களின் குடியிருப்புக்குள் வந்து செல்ல வசதியாக சூட்கேசில் பதுங்கியபடி பயணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, கோலாவை போலீசார் கைது செய்தனர்.

Post a Comment