Header Ads



மாற்றுக் கருத்துக்களை கூறமுடியாத நிலையில் நாட்டு மக்கள் உள்ளனர் - கருஜயசூரிய

வடக்கில் பயங்கரவாதம் முடிவடைந்த நிலையில் தெற்கில் பயங்கரவாதம் தோற்றம் பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவிக்கின்றார்.

கிருலப்பனையில் இன்று  புதன்கிழமை  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அடுத்து வரவுள்ள தேர்தலின் போது எதிர்கொள்ள நேரிடும் நிலைமையை கட்டுவனவில் இடம்பெற்ற சம்பவத்தில் இருந்து அவதானிக்க முடிந்துள்ளதாக கரு ஜயசூரிய குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு நேர்ந்த விடயமாக இதனைத் தாம் உற்று நோக்கவில்லை என கரு ஜயசூரிய தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட எந்தவொரு நபரும் எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகும் சம்பவமாகவே அதனைக் கருதுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் எவரும் மாற்றுக் கருத்துக்களை கூறமுடியாது இருப்பதாக அவர் மேலும் கூறினார்.


No comments

Powered by Blogger.