தயவுசெய்து உதவுங்கள்..!
யாழ்ப்பாணம் ஜின்னா வீதியை பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மத் தாஹா மக்கீன் என்பவரின் மனைவி அனீஸா (46 வயது) இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் தற்போது கண்டி அரசினர் வைத்தியசாலையில் மூன்று தினங்களுக்கு ஒரு முறை குருதி சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகின்றார். இவருடைய நிலமை மிகமோசமாக உள்ளதாகவும் உடனடியாக சிறுநீரகத்தில் ஒன்று மாற்றப்பட வேண்டும் என்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுனர் டாக்டர் பி.கே. கரிசந்திர (கண்டி) தெரிவித்துள்ளார்.
இவருடைய குடும்ப உறுப்பினர்களின் நிறுநீரகம் இவருக்கு சரியாக பொருந்தாதலினால் நன்கொடையாளர் ஒருவரின் சிறுநீரகத்தையே இவருக்கு பொருத்த வேண்டியுள்ளது. உறவினர் அல்லாதவர்களின் சிறுநீரகத்தை அரசாங்க வைத்தியசாலையில் வைத்து மாற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் இவரது சிகிச்சை தனியார் வைத்தியசாலையிலேயே (கண்டி நேர்ஸிங் கோமில் ) செய்ய வேண்டியுள்ளது. இதற்கான சிகிச்சைக் கட்டணமாக 15 இலட்சங்களும் சிறுநீரக நன்கொடையாளருக்கான கொடுப்பனவாக 5 இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய்களும் தொடர்பரிசோதனைகளுக்காக 2 இலட்சங்களும் செலவாகும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதியதி நிதியிலிருந்து ஏறக்குறைய ஐந்து இலட்சங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இவருடைய கணவர் மக்கீன் பாதையோர வியாகாரம் செய்து வருபவர் என்பதாலும் இவருக்கு எட்டு பிள்ளைகள் இருப்பதாலும் இவரால் இந்த சிகிச்சையை சுயமே மேற்கொள்ள முடியாதுள்ளது. இதன் காரணமாக நல்லுள்ளம் கொண்ட யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் வாசகர்களாகிய உங்களிடமும் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மன் போன்ற ஐரோப்பிய மற்றும் மேற்கத்தைய நாடுகளில் வாழும் முஸ்லிம் சகோதரர்களிடமிருந்தும் நிதியுதவியை இவர் அவசரமாக எதிர்பார்க்கின்றார்.
உதவிகளை அவசரமாக பின்வரும் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கும் படி பணிவுடன் நோயாளியின் கணவர் வேண்டிக் கொள்கின்றார்.
எம்.ரி.மக்கீன்
கணக்கு இலக்கம்: 73320009
இலங்கை வங்கி
கண்டி கிளை
இலங்கை என்ற வங்கிக் கணக்குக்கு தங்கள் நன்கொடைகளை அனுப்பலாம்.
இவருடைய மனைவியின் மருத்துவ நிலமைகள் உண்மையானது என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முஹமத் தாஹா மக்கீன் - தொலைபேசி 0773839241
நன்றி!


ஐரோப்பியாவில் நாலு பேர் சேர்ந்து நல்லது செய்ய விரும்பி காசு சேர்க்க வெளிக்கிட்டால் அவர்களுக்கு தவ்ஹீத் பட்டம் சூட்டி,வீடுவீடாக தொலைபேசி மூலம் உதவி செய்ய வேண்டாம் என தவ்வா செய்வார்கள்.இப்படித்தான் லண்டனில் தவ்வா பணிக்கு இடம் வாங்குவதற்கு ஊர் ,ஊராக காசு சேர்க்கும்போது, சுவிசில் உள்ளவர்களுக்கு போன்
ReplyDeleteபண்ணி பிரான்சில் இருந்து மாபெரும் தொண்டு ஆற்றினார்கள்.இப்படியான விடயங்கள் உதவி கேட்பவருக்கு
தெரியுமா?
யாழ் குருவி
Please write how much you can contribute.
ReplyDelete