Header Ads



இப்படியும் நடந்தது..!

71 வயது வயோதிபப் பெண்மணியை 45 வயது நபர் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவ்விருவரும் மகிழ்ச்சியோடு தங்கள் தேன்நிலவை கழித்த பின்னர் ஒருநாள் இந்த இளம் கணவன் அந்தப் பெண்மணியின் 35 இலட்சம் ரூபாவுடன் கம்பிநீட்டிய ஒரு வேதனைக்குரிய சம்பவம் நடைபெற்றிருக்கின்றது.

அத்துருகிரியவைச் சேர்ந்த இந்தப் பெண்மணி தனக்கு ஒரு மணமகன்தேவை என்று பத்திரிகைகளில் செய்திருந்த விளம்பரத்தைப் பார்த்து இந்த நபர் அந்தப்பெண்ணை நேரில் சென்று பார்த்து அவர் பண வசதி உடையவள் என்பதைத் தெரிந்துகொண்டு அப்பெண்ணை தான் மணம் முடிக்க விரும்புவதாகக் கூறியதை அடுத்து இவர்களுக்கிடையில் காதல் மலர்ந்தது.

சில நாட்களுக்குப் பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு நுவரெலியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்களின் தேன் நிலவை மகிழ்ச்சியோடு கழித்தனர். அந்த வயோதிப மணமகள் காதல் வெள்ளத்தில் மூழ்கியிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்தக் கணவன் தனக்கு அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்று தனது புதுமனைவிக்கு தெரிவித்திருக்கிறார்.

அன்பே நீ எங்கு சென்றாலும் அங்கு நான் வரத் தயார் என்று தெரிவித்த அந்தப் பெண் உடனடியாக தனது வங்கியில் இருந்து 35 இலட்ச ரூபாவை எடுத்து தனது அன்புக் கணவனிடம் ஒப்படைத்தாள். அதையடுத்து அவுஸ்தி ரேலியாவுக்குச் செல்லும் தனது கணவனை வழியனுப்பி வைப்பதற்காக அந்தப் பெண் மூட்டை முடிச்சுகளுடன் விமான நிலையத்துக்குச் சென்றார். மனைவியிடம் பிரியாவிடை பெற்று அவுஸ்திரேலியாவுக்கு விமானம் ஏறிய கணவன் குறுகிய காலத்தில் அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பேன் என்று உறுதி அளித்த போதிலும் அந்தக் கணவன் தனது மனைவியுடன் எவ்வித தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இதையடுத்து அந்தப் பெண் பொலிஸாரிடம் தான் ஏமாற்றப் பட்டுவிட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.