பௌத்த தேரர்கள் சுகபோகம், ஆடம்பர வாகனங்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
V
பௌத்த மமதத்திலிருந்து எல்லாவெல மேதானந்த தேரரை ஒதுக்க நடவடிக்கைகளை மகா நாயக்க தேரர்கள் மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுக்கும் புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர, தர்ம ராஜ்ஜியத்தை உருவாக்கவென வந்தவர்கள் இன்று தமது ராஜ்ஜியத்தை கட்டியெப்பிக் கொண்டிருப்பதாகவும் விசனம் தெரிவித்தார்.
கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையில், சரத் மனமேந்திர இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் எங்கெல்லாம் புராதனச் சின்னங்கள் புதைக்கப்பட்டிக்கின்றது என்பது தொடர்பில் ஊர் ஊராகச் சென்று தகவல்கள் சேகரிக்கும் மேதானந்த தேரர், அத் தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்கி அவற்றை கொள்ளையடிப்பதற்கு உதவி செய்கிறார். அத்தோடு இவர் கையில் பச்சை குத்தியுள்ளார். எனவே தான் மஞ்சள் அங்கியாள் அதனை மறைத்துக் கொண்டுள்ளார். இது தர்மத்திற்கு எதிரானதாகும்.
புராதன சின்னங்களை காட்டிக் கொடுக்கும் மேதானந்த தேரர் ஒருபுறம் மறபுறம் பிட்ட தூவே சிறிதம்ம தேரர் ஆகியோர் பௌத்த தர்மத்திற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். எனவே மகா நாயக்க தேரர்கள் இத் தேரர்களை பௌத்த சாசனத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.
நாட்டில் தர்ம ராஜ்ஜியத்தை உருவாக்கப் போவதாக ஹெல உறுமய பிக்குமார் இன்று தமக்கான சுக போக ராஜ்ஜியங்களையும் மாளிகைகளையும் கட்டியெழுப்பி வருகின்றனர். ரூபா 50 இலட்சம் பணம் மற்றும் வானொன்றை பெற்றுக் கொண்டே இவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினார்கள். இதனை எங்கும் நான் கூறத் தயாராக இருக்கின்றேன் என்றார்.

Post a Comment