Header Ads



தம்புள்ளயில் வாகன விபத்து - காத்தான்குடி சகோதரர்கள் இருவர் வபாத்தாகினர்

TM

மட்டக்களப்பு, காத்தான்குடியிலிருந்து புறப்பட்ட வான் இன்று சனிக்கிழமை அதிகாலை  விபத்திற்குள்ளானதில் அவ்வானில் பயணித்த இருவரும் சம்பவ இடத்தில் வபாத்தாகினர். தம்புள்ளை பிரதான வீதியில் குறித்த வான் லொறியொன்றுடன் மோதியே இவ்விபத்து சம்பவித்தது.

காத்தான்குடியைச் சந்தவர்களான வானின் சாரதி எம்.ஏ.லத்தீப், எம்.நிப்றாஸ் ஆகியோரே வபாத்தானதாக காத்தான்குடி வான் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.சம்சுதீன் தெரிவித்தார். இவர்களின் ஜனாஸாக்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

1 comment:

  1. இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்
    Daoud Tharik

    ReplyDelete

Powered by Blogger.