முஸ்லிம்களை எதற்காக கிள்ளுகிறீர்கள்..? முஸ்லிம் அரசியல் வாதிகள் ஆத்திரம்
முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களின் விபரங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவு கோரியுள்ளது முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்தியில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசனம் வெளியிட்டுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், ஹசன் அலி, இந்த விவகாரத்தை தமது கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம், மஹிந்த ராஜபக்ஸவின் கவனத்துக்கு எடுத்துச் செல்வார் என்று தெரிவித்துள்ளார். “இது வரவேற்கத்தக்கது அல்ல, அவரகள் எதற்கு முஸ்லிம்களை கிள்ளுகிறார்கள் என்று தெரியவில்லை” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த விபரங்களை திரட்ட வேண்டிய வேலை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு இல்லை என்று மூத்தஅமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த விபரங்களை திரட்ட வேண்டிய வேலை குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு இல்லை என்று மூத்தஅமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியும் தெரிவித்துள்ளார்.
தம்புள்ள பள்ளிவாசலையும், தெகிவளை மதரசாவையும் அகற்றக் கோரி அண்மையில் பௌத்த பிக்குகள் போராட்டங்களை நடத்திய பின்னணியில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் இந்த நடவடிக்கை முஸ்லிம்களை அச்சமடைய வைத்துள்ளது. - pp

இவர்கள் ஆத்திரப்பட்டு என்ன பிரயோசனம் வெறும் பத்திரிகை விளம்பரத்துக்கு கும்மி அடிப்பவர்கள்.
ReplyDeleteமஹிந்த ராஜபக்ஸ அல்ல அமெரிக்கா ஜனாதிபதியிடம் போனாலும் பிரயோசனம் இல்லை எமது நாட்டு தலைவருக்கா எதுவும் தெரியாது ?????????? இந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சொல்லும் பொது மட்டும் ஆம் என்று தலைய ஆட்டுவதும் பின்னல் பெரும்பான்மையினருக்கு எப்படி வேண்டுமோ அப்படியே செய்து கொள்வார்கள்.
இந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இவர்களுடன் இருக்குமட்டும் எந்தப்பிரயோசனும் அப்பாவிகளான முஸ்லீம்களை போய்ச்சேராது என்பது மட்டும் உறுதி .
ஒரு முஸ்லீம் அன்பன்
Another ethnic cleansing by buddishts?
ReplyDeleteசொரணை இருக்குதா என்று பார்க்கிறார்கள் போல,
ReplyDeleteஅதுதான் உங்களுக்கு கிடையாதே!