Header Ads



இரண்டாவது மக்கள் எழுச்சி குறித்து இஹ்வானுல் முஸ்லிம்கள் எச்சரிக்கை

எகிப்தில் முபாரக் ஆட்சிக் காலத்துக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது தேர்தலை அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்ததை அடுத்து அங்கு மீண்டும் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் பெரும்பாலான ஆசனங்களை இஸ்லாமியக் கட்சிகள் வென்றிருந்தன.

அந்தத் தேர்தல் நடத்தப்பட்ட தேர்தல் முறைமை சடத்துக்கு முரணானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன். அந்தத் தேர்தல்கள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று அது கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பை ஒரு சதிப்புரட்சி நடவடிக்கை என்று வர்ணித்துள்ள மூத்த எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள், ஆழும் இராணுவ கவுன்ஸில் சட்ட அதிகாரத்தை தமது கையில் எடுக்க விளைவதாகவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த வார இறுதியில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் சார்பில் போட்டியிடும், முஹமட் மோர்சி அவர்கள், வரும் தேர்தல் நியாயமாக நடத்தப்படாவிடால், இரண்டாவது மக்கள் எழுச்சி நடக்கும் என்று எச்சரித்துள்ளார்.

No comments

Powered by Blogger.