யாழ்ப்பாண முஸ்லிம்களின் கவனத்துக்கு
யாழ்ப்பாணத்தில் நிவாரணப் பதிவு உள்ளோர், குடும்ப பதிவு அட்டை ('அ' கார்ட்) உள்ளவர்கள், வீடமைப்பு உதவிகள் கேட்டு யாழ்ப்பாணத்தில் பதிவு செய்துள்ளோர் மற்றும் வெளிமாவட்டங்களில் எப்பிரதேசத்திலும் வாக்காளராக பதிவு செய்யாதோர் ஆகிய அனைவரும் யாழ்ப்பாணம் சோனக வட்டாரத்தின் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்படுகிறார்கள்.
எதிர்காலத்தில் முஸ்லிம் வட்டாரத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கும் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற்ற உதவிகள் பெறுவதற்கும் இந்த வாக்காளர் பதிவு மிகவும் முக்கியம். எனவே மேற்படி பதிவுகளை அடுத்த ஒரு வாரத்தினுள் செய்து முடிக்குமாறு யாழ் முஸ்லிம்கள் வேண்டப்படுகிறார்கள். இரண்டு மாவட்டங்களில் வாக்காளராக பதிவு செய்வதை தவிர்த்துக் கொள்ளவும்.
எம்.எஸ்.ஜினூஸ், கிராம அதிகாரி – ஜே 86,யாழ் முஸ்லிம் வட்டாரம்.

Post a Comment