கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுக்கு சாதக நிலை
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு சாதகமான அலை வீச ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் மாற்று கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து வருகின்றமை அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.ஹசன் மௌலவி இன்னும் சில தினங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையவுள்ளார் என்று கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எம்.அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் அக்கரைப்பற்று மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் பதவிகளை வகித்த ஏ.எல். தவம் முஸ்லிம் காங்கிரசில் கடந்தவாரம் இணைந்து கொண்டார்.
இதோபோன்று – கிழக்கு மாகாணசபையின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினரான ஜவாஹிர் சாலியும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரசில் இணைந்துள்ளார். இவர் கடந்த மாகாண சபை தேர்தலில் கல்குடா தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இன்னும் சில நாட்களில் திருகோணமலை மாவட்டத்தின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்னணியின் கிழக்கு மாகாணசபை உறுப்பிர் ஹசன் மௌலவியும் முஸ்லிம் காங்கிரசில் இணையவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஹசன் மௌலவி முஸ்லிம் காங்கிரசில் இணையும் விருப்பத்தை கிழக்கு மாகாணசபை மு.கா. உறுப்பினர் ஏ.எம்.அப்துல் மஜீத் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அறியப்படுத்தியதாகவும், அதற்கு ரஊப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரசில் எல்லோரும் இணைய முடியும். அதற்கு தடையெதுவும் இல்லை என்று பச்சை கொடி காட்டியதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து வருவது எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸுக்கு சாதகமான நிலையை தோற்றுவிக்குமென நம்பப்படுகிறது. அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்திற்கு சாதகமான நிலை தற்போது இல்லையென அண்மையில் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்! முஸ்லிம் காங்கிரசுக்கு எல்லோருடைய ஆதரவும் கிடைக்க வேண்டுமென,இறைவனைப்பிரார்த்திக்கின்றேன்!
ReplyDelete