Header Ads



இஹ்வான்களுக்கு சோதனை - எகிப்து தேர்தலில் வாக்களிப்பு மந்தம்



எகிப்து அதிபர் தேர்தலில் ஓட்டுப்பதிவு மந்தமாக இருந்தது. எந்த ஓட்டுச் சாவடியிலும் 15 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகள் பதிவாகவில்லை.எகிப்து அதிபராக 30 ஆண்டுகளாக கோலோச்சி வந்த முபாரக், பொது மக்களின் கடும் கண்டனம் மற்றும் தொடர் போராட்டம் காரணமாக பதவி விலக நேரிட்டது. அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்க வேண்டும் என பொது மக்கள், நீதித் துறையை கோரி வருகின்றனர்.

குழு அமைப்பு:நாட்டில் பார்லிமென்ட் செயல்பாடுகளை நீதிமன்றம் முடக்கியது. தொடர்ந்து ராணுவ ஆட்சியாளர்கள் புதிய சட்டத் திட்டங்களை வகுக்க முடிவு செய்து, அதற்காக 100 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். இந்நிலையில், எகிப்தில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், முபாரக் ஆட்சியின் போது பிரதமராக பதவி வகித்து, பின்னால் அவரால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அகமது ஷாபிக் மற்றும் இஸ்லாமியர்களின் சகோதரர் எனக் கருதப்படும் முகமது மூர்சி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

ஆர்வமில்லை:நாட்டில் முதல் முறையாக ஒளிவு மறைவின்றி நடைபெறும் முதல் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆர்வமின்றி வாக்காளர்கள் காணப்பட்டனர். தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. மந்தகதியில் நடந்த இந்த ஓட்டுப்பதிவில், 20 சதவீத வாக்காளர்கள் மட்டுமே ஓட்டு போட்டனர்.இரண்டாம் நாள் ஓட்டுப்பதிவு துவங்கியும், வாக்காளர்கள் ஆர்வமின்றியே காணப்பட்டனர். இதுகுறித்து, அந்நாட்டின் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் விடுத்துள்ள அறிக்கையில், "ஓட்டுச் சாவடிகள் அனைத்திலும் வாக்காளர்கள் ஆர்வமின்றியே காணப்பட்டனர். இதனால், 15 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகள் பதிவாகவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

வன்முறை:தேர்தல் ஓட்டுப்பதிவு குறித்து, அந்நாட்டின் தேர்தல் தலைவர் பரூக் சுல்தான் கூறுகையில், "தேர்தல் ஓட்டுப்பதிவின் முதல் நாளில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு, தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களுமே பொறுப்பு' என்றார்.தேர்தலில் மந்தமான ஓட்டுப்பதிவுக்கு கடும் வெயில் காரணமாக இருக்கலாம் என, தேர்தல் பார்வையாளர்கள் சிலர் தெரிவித்தனர். இதனால், ஓட்டுப்பதிவுக்கான நேரம் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டது

2 comments:

  1. அன்பர்களே இதுதான் முஸ்லிம்களின் நிலைப்பாடு !!!!!!
    !!!!!! என்ன புரிகின்றதா !!!!!!! ?

    ஹோஸ்னி முபாரக்கின் 30 வருட ஆட்சியே ஒரு இருண்ட யுகம் என கருதி மக்கள் ஆர்பாட்டம் செய்து ஒரு புதிய ஆட்சிக்கு வித்திட்டது. ஆனால் முஸ்லிம்களின் தலைவிதியேய் பார்த்திர்களா ? தமக்குத்தேவையான ஒரு நல்ல தலைவனை தெரிவு செய்ய உள்ள ஒரு அருமையான சந்தர்பத்தை தவற விடுகின்றனர்.

    புரட்சி செய்தநேரம் மழை , வெய்யில்,பசி,குடும்பம்,சாதிசனம் என்று
    எதுவும் விளங்கவில்லை. ஆனால் காலம் கனிந்த இந்த நேரம் நல்ல ஒருவனை தெரிவு செய்ய வெயில் ஒரு காரணமாக உள்ளது. எல்லாம் ஒரு சோடா பவர் மாதிரி குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் போன்கிஎளும்பிவிட்டு இனி எல்லாம் சரி என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள். கடைசிவரை நின்று முற்றுமுழுதாக முடிப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். ( இது எங்கள் ஊர் பாடசாலை,பள்ளி,பொது, கூட்டம் எல்லாவற்றிலும் இந்நிலைமை இருக்கின்றது ) கடைசியாக யாரும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் கடைசியாக இருக்கின்ற எவனோ ஒரு அயோக்கியனுக்கு அல்லது ஒரு அடிமுட்டளுக்கு ஆட்சி பதவி, தலைவன் பதவி போகின்றது. இப்போது புரிகின்றதா எமது முஸ்லிம்களின் நிலைப்பாடு. (தமிழ் எழுத்து சரியாக வருவது இல்லை மன்னிக்கவும் )

    குறிப்பு : யார் என்ன சொன்னாலும் யார் என்ன செய்தாலும் படைத்த இறைவன் என்ன நாடி இருக்கின்றானோ அதுதான் நிச்சயம் நடக்கும் ( நல்ல உள்ளங்களின் துஆக்களின் மூலம் அல்லாஹ் உதவி செய்தல் மட்டுமே )

    இஷாக் ரஹீம்

    டோஹா கட்டார்

    ReplyDelete
  2. MB won !!! Allahu Akbar...

    ReplyDelete

Powered by Blogger.