Header Ads



பாகிஸ்தானில் பொப் பாடகி சுட்டுக்கொலை

பாகிஸ்தானிய பாடகி கஜாலா ஜாவித் சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தானின் பிரபல பாடகியும், நடன கலைஞருமான கஜாலா ஜாவித்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். தலிபான்களின் ஆதிக்கம் மிக்க ஸ்வாத் பகுதியில் உள்ள பாஷ்தோவில் இவர் பிறந்தார்.

நடனமாடுவது, பாட்டுபாடுவது போன்றவை பாரம்பரியத்துக்கு விரோதமானவை என, தலிபான்கள் இவரை மிரட்டியதால், அப்பகுதியிலிருந்து குடிபெயர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, வர்த்தகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர், அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில், பெஷாவரில் உள்ள வீட்டில், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து கஜாலாவையும், அவரது தந்தையையும் சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றனர். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக கஜாலாவின் சகோதரி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.