Header Ads



மூதூர் ஜபல் மலையில் புத்தர் சிலை அமைக்க அனுமதியில்லை - ரெஜினோல்ட்குரே

TM

மூதூர் பிரதேசத்திலுள்ள ஜபல் நகர் மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கோ அல்லது புத்தர் சிலை வைப்பதற்கோ அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என சிறுகைத்தொழில் ஏற்றுமதி ஊக்கவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

 முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும் ஜனாதிபதியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளருமான நஜீப் ஏ. மஜீத்தின் அழைப்பின் பேரில் மூதூர் பிரதேசத்திற்கு அமைச்சர் ரெஜினோல்ட் குரே இன்று விஜயம் செய்தார்.
 இதன்போது, நத்துவதுல் உலமா அரபுக் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

 "குறித்த மலை பகுதியில் தொல்பொருள் தடயங்கள் இருந்தால் அதனை பாதுகாப்பதற்கு மாத்திரமே தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாறாக குறித்த மலை பகுதியில் புதிதாக பௌத்த விகாரை அமைப்பதற்கோ அல்லது புத்தர் சிலை வைப்பதற்கோ அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் குறித்த பகுதி புனித பிரதேசமாகவும்  பிரகடனப்படுத்தப்படமாட்டாது.

 எனவே, இப்பிரதேச வாழ் மக்களின் நிலங்கள் பாதிக்கப்படுமென்றோ, கல் உடைக்கும் தொழில் நிறுத்தப்படுமென்றோ அச்சங்கொள்ள தேவையில்லை" என்றார்.

 இக்கலந்துரையாடலில் மூதூர் மஜ்லிஸ் ஷுறா தலைவர் மௌலவி எம்..எம். கரீம், முதூர் உலமா சபையின் தலைவர்  மௌலவி கே.எம். ஹரீஸ், மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் கே.எம். காலிதீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எம். நஸீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

3 comments:

  1. அமைச்சர்கள் சொல்கிறார்களே தவிர,ராஜபக்ச குடும்பம் சொல்லவில்லையே.யாராவது சாஸ்திரிகள் இலங்கை முழுவதும் பௌத்த கோவில் கட்டினால்,அடிக்கடி கடல் கடந்து போனால் பரம்பரையாக நாட்டை ஆளலாம் போட்டுக் கொடுத்திருப்பார்கள்.யதார்த்தத்தை நம்பாத மூடக் கொள்கைகள்தானே உலகை ஆளுது.
    Meraan

    ReplyDelete
  2. Ahha....that is the way to start. Now they say that land belongs to archaeological department. If they find something ( soon it will be buried there and excavated one day ) there, then they will make it as a "sacred area". Can you understand the plan?

    ReplyDelete
  3. நல்ல செய்தி! ஒர் அரசாங்க அமைச்சரே இவ்வாறு கூறுவதனால் இதை நம்பத்தான் வேண்டும். இப்போதைக்கு இது ஆறுதலான விடயம்தான் என்றாலும் இவ்வாறான உறுதிமொழிகளின் ஆயுள்குறித்துத்தான் நாம் சிந்திக்க வேண்டும். அப்படியானால் அரசாங்கத்தின் அனுமதியின்றி தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட அந்த மதத்தலைவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ஏதுமில்லையா...

    அது ஒருபுறமிருக்க, அமைச்சரின் பேச்சின்படி பார்த்ததால் மற்றுமொரு நியாயமான சந்தேகமும் வருகின்றது. தொல்பொருள் விடயம்தான் அது. இயற்கை வளங்களின்மீது தனியொரு மதச்சின்னங்களை நிறுவுவது என்பதை விடுத்து தொல்பொருள் பாணியிலே பேரின மதத்தின் பண்டைய இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒழுங்குகளை கபடமான முறையில் இவர்கள் செய்துவிடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

    சான்று இல்லாமலேயே அரசாங்க அனுமதி இல்லாமலேயே பூர்வீகமாக வாழும் முஸ்லீம்களிடம், 'ஊரைவிட்டு ஓடிப்போய் விடுங்கள்' என்று கொக்கரிப்பவர்கள் அப்படி ஏதும் கிடைத்துவிட்டால் என்னதான் செய்யமாட்டார்கள் சொல்லுங்கள்..

    'புதைப்பவர்களாலேயே மீண்டும் தோண்டியெடுக்கப்படுகின்ற விடயங்கள்' நமது நாட்டில் இதுவரை நிகழ்ந்த எத்தனையோ திட்டமிட்ட புனித நகராக்கல்களுக்கு வழிவகுத்த அனுபவங்கள்..

    ஆகவே, அப்படி எதுவும் நிகழாதிருப்பதை நாம் இனிமேல் கண்ணும் கருத்துமாக இருந்து பார்த்துக்கொள்ள வேண்டிய தேவையும் அவசியமும் உண்டு. பெரும்பாலும் ஆள்நடமாட்டமின்றியுள்ள ஒரு பரந்த குன்றுப்பகுதியை அதுவும் பாதுகாப்புத் தரப்பினரின் சஞ்சாரத்தில் உள்ள மூணாங்கட்டை மலைப்பகுதியை அவ்வாறு ஏதும் நிகழ்ந்து விடாதிருப்பதிலிருந்து பாதுகாத்துவிடத்தான் முடியுமா? Let's be aware & alert in future!

    ReplyDelete

Powered by Blogger.