கட்டாரில் திருடனை பிடிக்கச்சென்ற இலங்கை முஸ்லிம் இளைஞர் வபாத்தானார்
AD
கட்டார் பின் மஹமுத் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர் திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 23 வயதுடைய மொஹமட் மர்சிட் என்ற இலங்கை இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பணிபுரிந்த வர்த்தக நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்த ஒருவர் பணம் செலுத்தாமல் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.
இந்த சமயத்தில் குறித்த நபரை தப்பிச் செல்ல விடாது மொஹமட் மர்சிட் அவருடைய காரின் கண்ணாடியை பிடித்துக் கொண்டிருந்த வேளை கார் வேகமாகச் செல்ல தொடங்கிய வேளை விபத்து ஏற்பட்டுள்ளது.
வர்த்தக நிலையத்தில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தை கடந்த பின் மொஹமட் மர்சிட் காரில் இருந்து கீழே விழுந்துள்ள நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலையில் ஏற்பட்ட கடும் காயத்தால் மொஹமட் மர்சிட் உயிரிழந்துள்ள நிலையில் காரின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
உயிரிழந்த மொஹமட் மர்சிட் சுமார் இரண்டு வருட காலமாக தமது வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து வந்ததாக அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னலிலாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.வர்த்தக நிலைய உரிமையாளர் உரிய இழப்பீட்டு தொகையை
ReplyDeleteகொடுத்து உதவுவதோடு ,அவரின் குடும்ப அங்கத்தவரில் யாருக்காவது அதே வர்த்தக நிலையத்தில் தொழிலை ஏற்படுத்திக் கொடுத்தால் அல்லாஹ்வுக்கு உவப்பானதாக இருக்கும்.
Meraan
Innalillaahi vainnaa ilaihi rajun..
ReplyDeleteஎண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அனைத்தும்.
ReplyDeleteதிருடனோடு போரடுவது ஜிஹாத் ஆகும், அதில் உயிரிழந்தவர் ஜிஹாத்தில் மரணித்தவர் ஆகின்றார்.
அல்லா அவருடைய பாவங்களை மன்னித்து, ஜன்னத்துல் பிர்தவ்சை வழங்குவானாக.
ivar puttalam hidhayad nagar kamil murzzid aavaar ivarin janasha ensha allah innum or eru natkalill qataril atakkap fadum. nallakka thihathi pinnar arivikkapadum. sarjun
ReplyDeletenanri Sarjun.
ReplyDeleteMay allah forgive him.
Innalillahi Wa'inna Ilaihi Raji'un. May Allah forgive him and grant Jannathul Firdows. If the Janaza held in Qatar please join. To know about his Janaza call - Mohamed Akram on +974-77142883
ReplyDelete