Header Ads



இலங்கையில் 4 பேருக்கு ஒருவருக்கு நீரிழிவு - வருடாந்தம் 700 கால்கள் அகற்றப்படுகிறதாம்

நீரிழிவு நோய் காரணமாக வருடாந்தரம் 700 க்கும் அதிகமானவர்களின் கால்கள் அகற்றப்படுவதாக தேசிய நீரிழிவு மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நாட்டின் சகல பகுதிகளிலும், நீரிழிவு நோயால் பாதிப்படைந்தவர்கள் உள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
கட்டுப்பாடின்றி உணவு உட்கொள்ளுதல், மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றாமல் செயல்படுவது ஆகியனவே, நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கருத்துக் கணிப்புக்களுக்கு அமைய நான்கு பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது, 30 வருடங்களுக்கு நீடிக்குமானால், இந்த நோயானது இரண்டு பேரில் ஒருவருக்கு என்ற கவலை தரும் நிலையை அடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஓய்வின்மை, மாப்பொருள் சீனியுடனான உணவு வகைகளை அதிக அளவில் உட்கொள்ளுதல், புதிய பழம் மற்றும் மரக்கறி வகைகளை உட்கொள்ளாமை, தேவையற்ற உணவுகளை உட்கொள்ளுதல் போன்ற முறைமைகள் காரணமாகவே இந்த நோய் அதிக அளவில் பரவுவதாக மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

No comments

Powered by Blogger.