Header Ads



ஜெனீவாவில் கனடாவுக்கு அடிகொடுத்தது இலங்கை

தனது மக்களின் உரிமைகளை மீறும் கனடா, ஏனைய நாடுகளை நோக்கி தமது விரல்களை நீட்டக் கூடாது என்று இலங்கை எச்சரித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20வது கூட்டத்தொடர் நேற்று  திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது.

இந்தக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை, மனிதஉரிமை நிலைமைகளுக்கு முழுமையாக பொறுப்புக் கூறாத நாடுகளின் பட்டியலில், கனடா - கியூபெக் நிலைமையையும் உள்ளடக்கப் போவதாக கூறியிருந்தார்.

நவிபிள்ளையின் இந்த முடிவு குறித்து கனேடிய பிரதிநிதி தமது சுருக்கவுரையில் ஏமாற்றம் வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து பதிலளிக்கும நேரத்தில் உரையாற்றிய இலங்கை பிரதிநிதி, கியூபெக் நிலைமை குறித்த கனேடியப் பிரதிநிதியின் உரை ஆச்சரியமளிப்பதாக குறிப்பிட்டார். அத்துடன் தனது நாட்டில் பிரச்சினைகளை வைத்துக் கொண்டு மற்ற நாடுகளை நோக்கி கனடா தமது விரல்களை நீட்டக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும் என்றும், இது தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கனடா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.