Header Ads



மியன்மாரிலிருந்து தப்பிச்செல்லும் முஸ்லிம்கள் பங்களாதேஷ் எல்லையில் விரட்டியடிப்பு



மியான்மர் நாட்டில், ரகின் மாகாணத்தில் மூண்டுள்ள மத கலவரத்தால், குடிபெயர்ந்து வரும் அகதிகளை வங்கதேச எல்லை பாதுகாப்புப் படையினர் விரட்டி வருகின்றனர்.

மியான்மர் நாட்டில், ராணுவ ஆதிக்க ஆட்சி நடந்தாலும் சமீப காலமாக, அங்கு ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராகின் மாகாணத்தில், கடந்த ஐந்து நாட்களாக முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டுள்ளது. ராகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்த, 8 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

 இவர்கள், மியான்மரில் குடியுரிமை கேட்டு, போராடி வருகின்றனர். சட்ட விரோதமாக குடிபெயர்ந்தவர்களுக்கு, குடியுரிமை அளிக்க, மியான்மர் அரசு மறுத்து விட்டது. இதற்கிடையே, முஸ்லிம்களின் குடிசைகளை, தீ வைத்து கொளுத்தி விட்டதாக கூறி, கடந்த வாரம், பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர்.

இதையடுத்து, மவுங்தா பகுதியில், அவசர நிலை அறிவிக்கப்பட்டு, காலை முதல், இரவு வரை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதட்டமான சூழல் இங்கு நிலவுவதால், ஐ.நா., அமைப்பின் ஊழியர்கள், 44 பேர், பாதுகாப்பு கருதி, மவுங்தா பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த, மியான்மர் அரசு, உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு கருதி, ஏராளமான முஸ்லிம்கள், தங்கள் தாயகமான வங்கதேசத்துக்குள் செல்ல முடிவு செய்துள்ளனர். நப் என்ற ஆற்றின் மூலமும், எல்லை பகுதி வழியாகவும் பலர் ஊடுருவி வருகின்றனர். இதனால், உஷாரடைந்த வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர், அகதிகளை விரட்டியடித்து வருகின்றனர்.

2 comments:

  1. ivar ippa solluvaru appuram innoru kuttam pala varudankalukku pirahu inka irunthu ponka enpaarhal enna ideayada ithu neenda kaala thittam pola....paapom namada sanakkiya thalaivarkalai emathu pillaihal sandai pidikka kalam amaikkama iruntha sari

    ReplyDelete
  2. is Bangladesh is Muslim county?

    ReplyDelete

Powered by Blogger.