Header Ads



'உங்கள் அனைவரையும் ஊரைவிட்டே துரத்திவிடுவேன்' - சேருவில பௌத்த தேரர்

முபா சூளா

போருக்குப்பிந்திய இலங்கையில் அண்மைக்காலமாக சில பௌத்த தீவிர செயற்பாட்டாளர்களினால் முஸ்லிம்களது சமய,பொருளாதார ஸ்தலங்களின் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல், அச்சுறுத்தல் என்பனவற்றை யாவரும் அறிவோம். மட்டுமல்லாமல் ஒருசிலரின் இச்செயற்பாடு இலங்கை மக்களின் சகவாழ்வுக்கும், பரஸ்பர புரிந்துணர்வுக்கும் சவாலாக மாறிவருகிறது.

இத்தகைய செயற்பாடுகள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். என சிங்கள மக்களும் புத்தி ஜீவிகளும் கருத்தத்தெரிவித்து வருவதானது ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது. எனினும் தீவிர செயற்பாட்டாளர்களது செயற்பாடானது சட்டத்தைக்கருத்திற் கொள்ளாது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவது, மக்கள் மத்தியில் அவநம்பிக்கையையும், அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

அண்மையில் மூதூரில் இடம்பெற்ற சில பௌத்த தீவிர செயற்பாட்டாளர்களின் செயற்பாட்டால் மூதூரில் வாழும் மூவின மக்களும் பதட்டத்துக்குள்ளாகியுள்ளனர்.
       
மூதூரின் மையப்பகுதியில் ஜபல்நகர் மூணாங்கட்டை மலை எனப்படுகின்ற மலையின் மீது புத்தர் சிலை ஒன்றை நிறுவும் வேலையை சேருவிலை விகாராதிபதி சங்கைக்குரிய. சரணகீர்த்தி தேரோ அவர்கள் ஆரம்பித்துள்ளார்.

இம்மலையானது, மூதார்பபிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டது. அதில் சேருவிலையைச் சேர்ந்த தேரோ அவர்கள் பிரதேச சபையையின் அனுமதியையோ  சர்வமதக்குழுவின் கருத்துக்களையோ பொருட்படுத்தாமல் எல்லோருக்கும் பொதுவாக பண்ணெடுங்காலமாக பயன்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு இயற்கை வளத்தின் மீது சமய அதிக்கத்தை ஏற்படுத்த முற்படுகின்றார். இச்செயலானது,  பௌத்தசமயத்தை  சட்டத்தை மதிக்காத ஏனைய மக்களது அபிலாசைகளை கருத்திற்கொள்ளாத ஒருசமயம் என எம்மை நம்பிவாழும் சிறுபான்மைமக்களுக்கு அறிமுகப்படுத்துவதாகி விடும். என மூதூர் வாழ் சிங்கள மக்கள் கவலை கொண்டுள்ளனர்.

ஜபல்நகர் மலையானது, மூதூருக்கு அழகு சேர்க்கும் ஒரு தனித்துவமான இயற்கையழகாகும். அதனை எண்ணி இங்கு வாழும் மூவின மக்களும் பெருமை கொண்டுள்ளனர்.

இம்மலையைச் சூழவுள்ள வயற்காணிகள் குடியிரப்புக்காணிகள் அனைத்தும் சிறுபான்மைமக்களான முஸ்லிம், தமிழ்மக்களது காணிகளாகும். இதுவே இம்மக்களது பிரதான ஜிவனோபாயமுமாகும்.மேலும், சுமாரர்500 குடும்பங்கள் கல்லுடைத்தலை ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளனர்.பண்ணெடுங்காலமாக மூதார் பிரதேசத்தின் கருங்கல் தேவையை இம்லையே வழங்கிவருகிறது.

இவ்வாறிருக்கையில் சேருவிலை தேரோ அவர்கள் மூதூர் பிதேசத்துக்கு வந்து எல்லோருக்கும் பொதுவான இயற்கை வளத்தை பௌத்த சமய ஆளுகைக்குட்படுத்துவதானது, மக்களது இயல்பு வாழ்வை சீர்குலைப்பதாக இருக்கிறது.

மலையுச்சியில் சிலை வைப்பது தொடர்பாக மூதூர்வாழ் சிங்கள மக்களிடமோ, பிரதேச சபையிடமோ ,சர்வமதக்கழவிடமோ கலந்து பேசாமை குறித்து கடந்த 12.06.2012 அன்று மலையில் சிலை வைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த சேருவில தேரோவிடம் சர்வமதக்குழவினரும் தவிசாளரும் உரையாடச் சென்ற போது, அவர் மரியாதைக்குறைவான வார்த்தைகளால் திட்டியதோடல்லாமல் 'உங்கள் அனைவரையும் ஊரைவிட்டே துரத்திவிடுவேன்' என அச்சுறுத்தியுள்ளார்.

மூதூரில் வாழும் மூவினமும் சுமுகமாக வாழும் இக்காலத்தில் இங்குள்ளமக்கள் பயன் பெற்றுவரும் இயற்கைவளமொன்றின் மீது சமய அடையாத்தினை நிறுவவேண்டியதன் தேவையெதுவும் இங்கில்லை. ஏற்கனவே இங்கு வாழம் சகோதர சிங்களமக்களுக்கு மிகப்பெரியதொரு விகாரை இருந்த வருகிறது.

எனவே மலையுச்சியில் சிலை நிறுவப்படும் பட்சத்தில் அது மக்கள் மத்தியில் பல பிரச்சினைகளை ஆரம்பித்து  வைப்பதாகிவிடும். உடனில்லாவிட்டாலும் நாளடைவில் கல்லுடைப்பு தடை செய்யப்படலம் அப்போது 500குடும்பங்கள் தம் கல்லுடைக்கும் ஜீவனோபாயத்தை இழக்கநேரிடும். மட்டுமல்லாது இங்குள்ள மூவின மக்களுமே எதிர்காலத்தில் பௌதிக அபிவிருத்திக்கு இன்றியமையாத கருங்கல்லை  87 மைல்களுக்கப்பால் உள்ள கந்தளாயில் இருந்து பன்மடங்கு பணம் செலவிட்டு மலையடிவாரமூடாக இறக்குமதி செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.

அத்தோடு, நீண்டகாலத்தில் டம்புள்ளை போன்று புனிதப்பிரதேசம் பிரகடணப்படுத்தும் போது, மலையைச்சழவுள்ள விளை நிலத்துக்குள்ளும குடியிருப்புக்காணிக்குள்ளும் கால் வைக்க முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு இங்குவாழும் சிறுபான்மை மக்களது, பொருளாதாரத்தை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கி மக்களை விரக்தி நிலைக்கு உள்ளாக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர்.

எனவே, மூதூரில் வாழும் மூவின மக்கள் மத்தியிலும் உருவாக்கப்பட்டுள்ள பதட்ட நிலையை உடன் போக்கி எதிர்கால சந்ததியினரின் சகவாழ்வையும் ஜீவனோபாயத்தையும் பாதுகாத்து ஜனாதியதியின் 'போருக்குப்பிந்திய இலங்கையில் சகலருக்கும் வளமான சகவாழ்வு' என்ற கனவை நனவாக்க சர்ச்சைக்கரிய சிலைவைப்பினை தடுத்துநிறுத்தமாறு மரியாதைக்குரிய தேரோக்களையும், புத்திஜீவிகளையும் மக்களின் சுமுகமான வாழ்வின் பேரால் கேட்டுக் கொள்கின்றோம்.

-பள்ளிவாசல்கள் சம்மேளனம் - மூதூர்

4 comments:

  1. அன்பர்கேளே தற்போதைய இலங்கை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் இருந்த இலங்கை அல்ல யுத்தத்தில் வெற்றி பெற்ற மமதையில் தலை வீக்கம் கொண்டவர்களே.........உள்ளனர்.

    இதுவரை நடந்த பிரசினைகளுக்கு அரசில் உள்ள ( இவைகளுக்கு ) பொறுப்பான ஜனாதிபதியோ அல்லது பாதுகாப்பு செயலாளரோ பகிரங்கமாக எந்த அறிவித்தலோ அல்லது சட்ட பிரகாரம் எந்த நடவடிக்கையோ எடுத்ததாக எந்த செய்தியும் வெளிவரவில்லை. பெயருக்கு எமது முஸ்லீம் அமைச்சர்கள் அவர் உறுதியளித்தார் இவர் உறுதியளித்தார் என்று ஊடகங்களுக்கு தூக்கத்தில் இருந்து விழிதவர்கள் போல் அப்போதைக்கு மட்டும் குரல் கொடுத்து விட்டு திரும்பவும் பழைய உறங்கு நிலைக்கே சென்று விடுகின்றார்கள்.எனவே இவர்களையும் நம்பி எந்த பிரயோசனையும் இல்லை. அடுத்தது இவர்களது பேச்சு உயர் மட்டத்தில் எடுபடுவது குறைவு .

    அரசுக்கு தெரியும் இந்த முஸ்லீம் அமைச்சர்களை எப்படி மடக்குவது எதை கொடுத்தல் இவர்கள் வாய்பொத்தி கைகட்டி நிற்பார்கள் என்று. அரசுக்கு தேவையான பொது முஸ்லீம் நாடுகளுக்கு அனுப்பி பிச்சை வாங்குவதுக்கு மட்டும் இவர்களை மிக நுணுக்கமாக பயன்படுத்தி கொள்வார்கள். இந்த மடச்சாம்பரனிகளும் முஸ்லீம் நாடுகளுக்கு போய் அரசால் என்ன சொல்லிக்கொடுதர்களோ அதையே கிளிப்பிள்ளை மாதிரி சொல்லி பிச்சை எடுத்து நாட்டில் உள்ள தலைக்கனம் பிடிதவர்களுக்கும் மற்றும் சுரண்டல் வாதிகளுக்கும் பங்கிட்டு கொடுத்து விட்டு இவர்கள் மீண்டும் பழைய உறங்கு நிலைக்கே செல்வர்கள் இதுதான் இன்றைய முஸ்லீம் தலைமையின் நிலையும் அரசின் நிலையும்.

    இதற்கு எம்மை படைத்த இறைவன்தான் இத்தகைய பிரச்சினைக்கு முடிவு கட்டி அவைகளில் இருந்து பாதுகாத்து எம்மை நல்ல இமான் உள்ள முஸ்லிமாக மரணிக்க செய்யவேண்டும் .

    இஷாக் ரஹீம்

    டோஹா கட்டார்

    ReplyDelete
  2. இஷாக் ரகீமின் கருத்து சுப்பர்

    ReplyDelete
  3. கேட்கவும் பார்க்கவும் அசிங்கமாக இருக்கிறது யுத்தம் முடிய முதல் சமாதனம் பேசியவர்கள் யாவரும் சகோதரர்கள் என்றவர்கள் இப்போது மாறி விட்டார்கள் காலம் காலமாக இவர்கள் கடை பிடித்த மதமும் சரி இன கலாசாரமும் இவர்களை கட்டு படுத்த வில்லை பிரபாகரனின் துப்பாக்கிக்கு பயந்தே நல்லவர்களா நடித்து இருக்கிறார்கள் என்று எண்ண தொன்று கிறது இது வெட்க கேடானது என்பதை மற்ற வர்களுக்கு இடஞ்சல் உபத்திரவத்தை கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும்

    ReplyDelete
  4. வெறிகொண்டலையும் மனித மிருகங்களுக்கு கடிவாளம் போட வேண்டியவர் உலக சுற்றுலாவில் இருக்கிறார்.எந்த ஊரில் முஸ்லீம்கள் ஆயுதம் தூக்குகிறார்கள் என்றறிந்து,ஜிகாதிகள்,அல் ஹைதா என்று அடையாளப்படுத்தி அமெரிக்க,
    இஸ்ரவேல் போடும் எலும்புத் துண்டுக்காக ஒரு சில மத வெறியர்கள் செய்யும் அடாவடிதனத்தை காவல் துறையும் கை கட்டி வாய் பொத்தி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.