வை.எம்.எம்.ஏ. பேரவையின் 62 வது வருடாந்த பொதுக்கூட்டம் (படங்கள்)
ஏ.எஸ்.எம்.இர்ஷாத்
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 62 வது வருடாந்த பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை(24) கொழும்பு-10 டி.ஆர்.விஜயவர்த்தன மாவத்தையிலுள்ள தபால் திணைக்கள தலைமையக கேட்போர்கூடத்தில் பேரவையின் தலைவர் சட்டத்தரணி நத்வி பஹாவுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
கௌரவ அதிதியாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜேதாச ராஜபக்ஷ மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி பிர்தோசி றஸ்தெம் மெஹ்டா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
பேரவையின் செயலாளர் பைசல் ஜிப்ரி, போசகர் காதர் எம்.அலி, பேராசிரியர் கலாநிதி எம்.ஜே.ஏ.புர்கான், ஜனாப் காலித் எம் பாரூக் மற்றும் ஜனாப் எம்.ஆர்.எம்.சியாத் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
நாடளாவிய ரீதியிலான அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை கிளையினர் கலந்து கொண்டதுடன் அவர்கள் பேரவையினால் கௌரவிக்கப்பட்டனர். குறிப்பாக நிகழ்வில் கலந்து கொண்டதற்காக விஜயதாச ராஜபக்ஷ எம்பி வை.எம்.எம்.ஏ பேரவை தலைவரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்த நிகழ்வில் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

















Post a Comment