Header Ads



குவைத்தில் 60.000 தினாருடன் இலங்கையர் தப்பியோட்டம்

AD

சுமார் 60,000 குவைத் தினார் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக குவைத்தில் சாரதியாக பணிபுரியும் இலங்கை பிரஜை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து குவைத் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இரு ஊழியர்கள் பணியாற்றிய 570,000 தினார் பணம் இருந்த கார் ஒன்று தொடர்பாடல் வர்த்தக நிலையங்களில் பணம் வசூலித்துவிட்டு குவைத் விமான நிலைய தொடர்பாடல் வர்த்தக நிலையத்தில் பணம் வசூலிக்கச் சென்றுள்ளது.

காரில் இருவர் பணியாற்றியுள்ளனர். ஒருவர் சாரதி (இலங்கையர்) மற்றையவர் பண வசூலிப்பாளர்.

விமான நிலையத்திற்கு முன்புறம் காரை நிறுத்திவிட்டு சாரதியை பாதுகாப்புக்காக அமர்த்திவிட்டு பணியாளர் பணம் வசூலிக்கச் சென்றுள்ளார். காரில் 570,000 தினார் பணம் இருந்துள்ளது.

பணம் வசூலித்து திரும்பிய ஊழியர் அதிர்ச்சியடைந்தார். அதற்குக் காரணம் காரும் சாரதியும் திடீரென காணாமல் போனமையாகும்.

பின்னர் தனது நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் வழங்கி அதன் மூலம் குவைத் விமான நிலைய பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது.

காரையும் சாரதியையும் கண்டுபிடிக்க முடியவில்லை. செய்மதி ஊடாக கண்டுபிடிக்க முயற்சித்த போதும் அது கைகூடவில்லை.

அதன் பின்னர் கார் ஒரு மறைவான இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது காரில் இருந்த பணத்தில் 60,000 குவைத் தினார் காணாமல் போயுள்ளமை தெரியவந்தது.

இலங்கை சாரதியான அப்துல் அமீர் பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் நிலையில் குவைத் பொலிஸார் அவரை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அப்துல் அமீர் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த குவைத் முகவரியை கண்டுபிடித்துள்ள பொலிஸார், அவர் தற்போதும் அங்கு தங்கியிருக்கிறாரா அல்லது போலி விசாவில் இலங்கைக்குத் திரும்பிச் சென்றுவிட்டாரா என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


 

1 comment:

  1. இலங்கையர்கள் களவாடுவதில் கில்லாடி என்பதை பல இடங்களில் நிருபித்திருக்கிறார்கள். இது நம்நாட்டுக்குக்கும் நம்சமூகத்துக்கும் கிடைக்கும் அவப்பேறு. நேர்மை, நியாயம்,கட்டுப்பாடு, ஒழுக்கம் என்ற பன்பற்றவர்களாக பழகிவிட்டார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.