Header Ads



இஹ்வானுல் முஸ்லிம் வேட்பாளருக்கு இலங்கையில் 15 வாக்குகள், இஸ்ரேலில் பூச்சியம்



எகிப்திய ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்களிப்பில் வெளிநாடுகளில் தங்கியுள்ள எகிப்தியர்கள் வாக்களித்துள்ளனர். அதனடிப்படையில் இதுவரை 37 நாடுகளில் அவர்கள் அளித்துள்ள வாக்குகளின் பெறுபேறுகள் வெளிவந்துள்ளன. இதனடிப்படையிலே இஹ்வான்களின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி முர்ஸி முன்னிலை வகிக்கின்றார்.

இலங்கையில் வாழும் 18 எகிப்தியர்கள் வாக்களித்துள்ளனர். அவர்களில் 15 பேர் இஹ்வான்களின் வேட்பாளர் கலாநிதி முர்ஸிக்கும், 01 வாக்கு அஹ்மத் ஷபீக்குக்கும் அளிக்கப்பட்டுள்ளது. 02 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலில் உள்ள எகிப்தியர்களின் எந்தவொரு வாக்கும் தனக்கு அளிக்கப்படாமை குறித்து இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி முர்ஸி தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது குறித்து தான் பெருமையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமக்கு முபாரக் ஒரு பொக்கிஷம் என்பதை ஸியோனிஸம் உறுதிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.