கனவுகளை சுமந்துசென்ற 147 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்
மேற்கு ஆபிரிக்க நாடான பெனின் இராஜ்ஜியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட 147 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர். இவர்கள் இன்று பிற்பகல் 1.15 அளவில் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய குடிவரவு குடியகல்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு திரும்பியவர்களில் 20 பெண்களும் அடங்குகின்றனர். நாடு திரும்பிய இலங்கையர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர், அவர்கள் தேசிய இரகசிய தகவல் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக விமான நிலைய குடிவரவு குடியகல்வு அலுவலகம் அறிவித்துள்ளது.

Post a Comment