Header Ads



உலகில் சமாதான நாடு - இலங்கைக்கு 103 ஆவது இடம்

2012 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியின்படி இலங்கை சமாதானம் மேம்பட்டு வரும் 5 நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது..

இதன்படி பூட்டான், ஸிம்பாவ்வே, கயானா, பிலிப்பைன்ஸ் ஆகியவை ஏனைய நாடுகளாக இந்தப்பட்டியலில் சேர்;க்கப்பட்டுள்ளன


 இந்த பட்டியலின்படி சமாதான நிலைப்பாட்டில்  இலங்கை மொத்தமுள்ள 158 நாடுகளில் 103 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா 142 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது

பாகிஸ்தான் 149 வது இடத்திலும் ரஸ்யா 153 வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன சோமாலியா இறுதியான 158 வது நாடாக தரப்படுத்தரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், 157 வது இடத்திலும் உள்ளது

இந்தபட்டியல், திட்டமிடாத கொலைகள், உள்நாட்டு பிரச்சினையால் ஏற்பட்ட மரணங்கள், வன்முறைகள் அற்ற போராட்டங்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவற்றை மையமாகக்கொண்டு தயாரிக்கப்படுகிறது

இதேவேளை 2012 சமாதான சுட்டியின் முதல் நாடாக ஐஸ்லாந்து தெரிவாகியுள்ளது

டென்மார்க் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் இரண்டாம் இடத்தையும்  கனடா நான்காம் இடத்தையும் ஜப்பான் 5 ஆம் இடத்தையும் பெற்றுள்ளன. அமெரிக்கா சமாதான சுட்டியின்படி 88 வது நாடாக தரப்படுத்தப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.