அரசாங்கத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனை..?
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதாயின் இம்மாவட்ட மக்களின முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளது.
இது தொடர்பாக அரச உயர் மட்டத்தினருடன் பேசுவதற்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து உரிய தரப்பினருக்கு எடுத்து விளக்குவதற்கும் மு.காங்கிரஸ் தலைமை தீர்மானித்திருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸனலி நவமணிக்குத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றவூப் ஹக்கீம் பொதுச் செயலாளர் ஹஸனலி ஆகியோர் கடந்த வியாழக்கிழமை கூடி மாகாணசபைத் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகள் பலவற்றையும் எடுத்துள்ளனர்.
இதேவேளை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் பொருட்டு விஷேட கட்டமொன்று எதிர்வரும் 27ம் திகதி திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மு.கா.வின் அரசியல் மட்டத்தின் சகல பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இம்மாகாணத்தின் கட்சி உயர் பீட பிரதிநிதிகள், பாராளுமன்ற மாகாண, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் பொதுச் செயலாளர் தெரிவித்தார். இக்கூட்டத்தின்போது கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து கட்சி முக்கியஸ்தர்களிடம் கருத்துக் கோரப்படவுள்ளதுடன் இது தொடர்பான தீர்மானமொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை இத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகத்திலிருந்து உரிய படிவங்களைப் பெற்று ஜூன் மாதம் 15ம் திகதிக்கு முன்பு அனுப்பி வைக்குமாறும் கோரப்படுகின்றனர். கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. நவமணி

அப்போ பள்ளிவாசல்களுக்காக கூட்டிய கூட்டமெல்லாம் அம்போதானா அதுசரி பதவி முக்கியம்தானே
ReplyDeleteஉங்களுக்கு உங்கள் மாவட்ட பிரச்சனை தான் முக்கியம் என்றால்,ஏன் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்று பெயர் வைத்தீர்கள் ?கிழக்கிலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்றல்லவா பெயர் வைத்து உங்கள் பிரச்சனைகளைத்
ReplyDeleteதீர்க்க வேண்டும்.அரசியல் என்று வந்தால் முதலில் இன,மத வேறுபாடுகலில்லாத,பிரதேசவாதமில்லாத வார்த்தைகதான் வரவேண்டும்.மற்றவர்களைப் பற்றியும் நாம்கவலைப்படவேண்டும்.ஒரு முஸ்லிம் இன,மத வேறுபாடின்றி தீப்பளிக்க வேண்டும் என நாயக வாக்கு இருக்கிறது .
சரி,சரி, டங் சிலிப்பாகி விட்டது .தர வேண்டியதை தந்து பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ள 27 ம் திகதி
கண்டிக்கு ஓடோடி வாருங்கள்.
Meraan
என்ன ,பள்ளியா? அது தான் நாங்கள் பேசி முடிவுக்கு வந்துவிட்டோமே.சரி விமர்சிப்பவர்களுக்கு எந்த மாவட்டம்
ReplyDeleteவேண்டும்.கண்டிக்கு வரத் தேவையில்லை நாங்களே உங்களை தேடி வந்து வேண்டிய பதவிகளை உருவாக்கித் தருகிறோம்.ஏனெனில் நாங்கள் தானே அடுத்த முதலமைச்சர்.
Meraan