Header Ads



உதவி கோரப்படுகிறது..!


இலக்கம் 151/7, தவலங்கொயா, உக்குவளை எனுமிடத்தைச் சேர்ந்த திருமதி ஏ.எச்.நூறா பஸீனா என்பவரது 8வயதுடைய பாத்திமா நஸ்ரூகா எனும் குழந்தையின் வைத்தியச் சிகிச்சைக்காக உதவி கோரப்படுகிறது.

நூறா பஸீனா கெக்கிறாவையைச் சேந்ந்த ஆர்.எம்.நவ்பர் என்பவரை திருமணம் செய்து உக்குவளையில் வசித்து வருகின்ற இவர்களுக்கு இரு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது மூத்த ஆண் பிள்ளைக்கு 13 வயதும் இரண்டாவது பெண் குழந்தைக்கு 8 வயதும் மூன்றாவது ஆண் பிள்ளைக்கு 5 வயதுமாகும்.

இரண்டாவது பெண் குழந்தையான பாத்திமா நஸ்ரூகா ஒன்றரை வயதாக இருக்கும்போது குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசியை மகியங்கன வைத்தியசாலையில் போட்ட சில தினங்களில் குறித்த குழந்தையின் இயல்ப வாழ்க்கை முற்று முழுதாக பாதிக்கப்பட்டு விட்டதாக குழந்தையின் தாய் குறிப்பிடுகின்றார். போடப்பட்ட தடுப்பூசி காரணமாக மேற்படி குழந்தை சுயமாக எழுந்து நடமாட முடியாமலும் வாய்பேச முடியாமலும் காணப்படுகின்றார்.

தற்போது கணவரும் பிரிந்து சென்றுள்ள நிலையில் குழந்தையை காப்பாற்ற வைத்தியச் சிகிச்சைக்காக தனது வீட்டையும் விற்பனை செய்து விட்டதாகவும் தற்போது குழந்தைக்கு 8 வயதாக இருப்பதாகவும் பிள்ளைக்கு அடிக்கடி வலிப்பு போன்ற வேறு வருத்தங்களும் வருவதாகவும் இதன் காரணமாக அடிக்கடி பிள்ளைக்கான மருந்துவகைகள் எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தான் ஆளாகியிருப்பதாகவும் தாயார் தெரிவிக்கின்றார்.

எனவே தனது குழந்தையின் வைத்திய செலவுக்கும் எதிர்காலத்திற்கும் தம்மாலான உதவிகளை நல் உள்ளம் கொண்டவர்களிடமிருந்து இவர் எதிர்பார்க்கின்றார்.

ஆகையினால் மேற்படி குழந்தைக்கு உதவ விரும்புவோர் ஏ.எச்.நூறா பஸீனா என்பவரது தவலங்கொயா, உக்குவளையில் உள்ள மக்கள் வங்கிக் கிளை கணக்கிலக்கம் 201-2-001-0-0002707 எனும் வங்கிக் கணக்கிற்கு தமது நிதி உதவிகளை வைப்பில் இடுமாறு அவர் கோருகின்றார்.

2 comments:

  1. please give proper details like bank address & branch in English
    name also English

    ReplyDelete
  2. A.H. Noora Fazeena
    A/C No : 201 - 2 - 001 - 0 - 0002707
    Peoples Bank
    Ukkuwela Branch
    matale.

    ReplyDelete

Powered by Blogger.