Header Ads



ஒபாமா இப்படியும் உழைக்கிறார்...!

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 6-ந்தேதி நடக்கிறது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஓபாமா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் மிட்ரோம்னி களத்தில் உள்ளார். இதை தொடர்ந்து தேர்தல் பிராசரம் களை கட்ட தொடங்கியுள்ளது.

சமீபத்தில் தேர்தல் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் ஒபாமா ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். இதற்கு ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் ஆலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகள் மத்தியில் கடும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுத்தந்துள்ளது.

ஆனால் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்று லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் தேர்தல் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஒபாமா கலந்து கொண்டார். அங்கு ஜார்ஜ் குளுனியின் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நடினர் ஜார்ஜ் குளுனி ஆஸ்கார் விருது பெற்றுள்ளார்.

இவரது வீட்டில் நடந்த விருந்துக்கு ஒபாமா வந்திருப்பதை அறிந்ததும் அவரை பார்க்க ஏராளமானவர்கள் திரண்டனர்.

ஆனால், ஒபாமாவை பார்த்து பேச அவர்களிடம் தேர்தல் நிதி வசூலிக்கப்பட்டது. அதன் மூலம், ரூ.75 கோடி வசூலானது. இவர்கள் அனைவரும் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு ஒபாமா அளித்த ஆதரவை வரவேற்று இந்த தேர்தல் நிதி அளித்துள்ளனர்.

மேலும், ஆலிவுட் நட்சத்திரங்கள் பார்பராடிரய் சாண்டு, சல்மா ஹயக், தொபே மகுயர் மற்றும் ஜேக்பிளாக் உள்ளிட்டோரும் ஒபாமாவின் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு ஆதரவளித்துள்ளனர். இவர்களும் ஒபாமாவுடன் நடிகர் ஜார்ஜ் குளுனி வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

1 comment:

  1. நாசமாய்ப் போக.

    ReplyDelete

Powered by Blogger.