கருத்தை கருத்தால் வெல்ல முயலுங்கள் (பதில் கட்டுரை)
அபூ அப்துல்லாஹ்
இந்த பதிலை வரைகின்ற பொழுது 10 பதிலுரைகளை “யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் தவறுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றதா” என்ற ஆக்கத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. அவற்றை மிகச்சுருக்கமாக இவ்வாறு தொகுக்கலாம்.
1.முதலாவது பதில்: ஒரு அமைப்பை விமர்சிப்பதாக அமைகின்றது
2.இன்னும் சிலரையும் சேர்த்துக்கொண்டால் நல்லது என்று அமைகின்றது
3.வெளிநாட்டில் இயங்கும் அமைப்பு குறித்து குறிப்பிடப்படவில்லை என்ற கருத்து ஆக்ரோசமாக முன்வைக்கப்பட்டுள்ளது
4.குறித்த ஆக்கம் பொய்யான கற்பனைகளைக் கொண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஒருவரே இவ்வாறு எழுதுவதாகவும், மீலாத் விழாவுக்கும் குறித்த ஆக்கத்திற்கும் தொடர்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது
5.விமர்சனங்களை முழுமையாக முன்வையுங்கள், பொதுவானதாக முன்வைக்காதீர்கள் என்று கூறி, குறித்த ஆக்கத்தின் உட்கருத்தை சரியாக உணர்ந்துகொள்ள அழைக்கின்றது.
6.எழுத்தாளரை சாடுகின்றது, அத்துடன் எழுத்தாளருக்கும் குறித்த அமைப்புக்கும் தொடர்பிருப்பதாக கூறுகின்றது
7.யாழ்ப்பாணத்தில் அநியாயங்கள் நடக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றது
8.இஸ்லாம் பின்பற்றப்படவேண்டும் என அழுத்திச் சொல்கின்றது
9.எல்லோரையும் சிந்திக்க வைக்கும் விதத்தில் அமைந்துள்ளது
10.சிலரை படித்த முட்டாள்கள் என்றும் அவர்களால் விளையும் கேடுகள் குறித்தும் பேசுகின்றது.
இந்த பதில்களினூடாக யாழ்ப்பாண முஸ்லிம்களின் விவகாரங்கள் குறித்து கருத்துச்சொல்லும் பெரும்பாலனவர்கள், தமது பலவீனங்களை கருத்துக்களில் வெளிப்படுத்தி விடுகின்றார்கள். இதிலே பதிவிடப்பட்ட எந்தக்கருத்தும் குறித்த ஆக்கத்தின் மையக்கருத்தை விளங்கிக்கொள்ளாது தமது தனிப்பட குரோதங்களை, வெறுப்புகளை வெளிக்காட்டுவதாகவே பதில்களைப் பதிவிட்டுள்ளனர் என்பதி புலனாகின்றது. யாழ்ப்பாண சமூகத்தின் சமூகச்செயற்பாடுகளில் காணப்படும் பலவீனங்களே இதற்கான காரணமாகும்.
குறித்த ஆக்கம் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றம் அறிவுபூர்வமாகவும் விஞ்ஞானபூர்வமாகவும் வடிவமைக்கப்படவேண்டிய தேவையை வலியுறுத்தி, அதற்கான ஒரு சில முன்மொழிவுகளையும், கருத்துக்களையும் முன்வைத்துள்ளதோடு, அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த விருப்பங்கொண்ட அமைப்புகளையும் அறிமுகம் செய்கின்றது, இந்த நிலையிலே குறித்த 10 பதில்களும் மேற்படி ஆக்கத்தின் கருத்துக்களை விவாதிக்க மறந்த நிலையில் வேறு எங்கோ செல்வதைக் காண முடிகின்றது.
தயவு செய்து கருத்தை கருத்தால் வெல்ல முயலுங்கள், இங்கே முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகளில், வழிமுறைகளில் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள், அல்லது இதனோடு மேலதிகமாக இணைக்கப்படவேண்டியவை இருப்பின் அதனை எழுதுங்கள், அதுவே யாழ் முஸ்லிம் சமூகத்திற்கு தாங்கள் செய்யும் கருத்து ரீதியான பங்களிப்பாகும், அதனை விடுத்து விழளுக்கு இறைக்கும் தாங்கள்களின் கைதேர்ந்த கலையை இங்கே அரங்கேற்றாதீர்கள்.

யாழ் முஸ்லிம் இணையத்தளமே, இப்படி ஒரு ஆக்கம் தேவையா?
ReplyDeleteஎழுதுபவர் யார் என்பது எல்லோருக்கும் புரிகின்ற பொழுது,
கோளாறுகளுக்கு நீங்கள் ஏன் களம் கொடுக்கின்றீர்கள்?
தயவுசெய்து உங்கள் மதிப்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
இதில் அப்படி என்னதான் இருக்கின்றது? 10 விடயங்களைக் குறிப்பிட்டதைத் தவிர, ஒன்றுக்காவது பதில் இருக்கின்றதா?
எந்த ஊடகமும் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு சிறு சலசலப்பு குறித்து செய்தி வெளியிடாததால் கவலைப்பட்டுப் போன கட்டுரையாளர்,
ReplyDeleteஎப்படியாவது விடயத்தை ஊதிப் பெரிதாக்கி, அதில் லாபம் தேட வேண்டும் என்ற கேட்ட நோக்கில், யாருமே முக்கியத்துவம் கொடுக்காத
ஒரு நிகழ்வை வேண்டுமென்றே இங்கே குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
அதே நேரம் சின்னப்பள்ளிவாசலில் நடைபெற்ற நிகழ்வை எழுதினால், ஒரே பதில், போலிஸ்.
கடந்தமுறை, மீள் குடியேற்றத்தை ஊக்குவிக்கத்தான் மீலாத் விழா என்று அதற்காக கொடி பிடித்தார். (ஜிநூஸ் கிராம சேவகராக மாற்றலாகி வந்ததைத் தவிர, இதனால் விளைந்த புதிய மீள் குடியேற்ற
புள்ளி விவரங்களைத் தர முடியுமா? )
சொனகதேருவை, தான் நினைத்தபடி
சொனகரிஸ்தான் ஆக மாற்றப் பார்த்தார்.
இப்படி நிறைய குளறுபடிகள்.........
இவருக்குள் எதோ கோளாறு இருக்கின்றது. முதலில் அதனை சரி செய்துகொள்ளட்டும்.
யாழ் முஸ்லிம் இவரை கண்டுகொள்ளாமல் இருக்கட்டும்.
யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தை சிலர் திட்டம்போட்டு ஏமாற்றுகிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்தகட்டுரையில் உள்ளடங்கியுள்ள கோபம் ஆகும்.
ReplyDeleteNilaam - Puttalam
Mohamed Rasmin
ReplyDeleteJaffna
அஜ்மல் அல்லது அஸ்மின் யார் இந்த கட்டுரையை எழுதியது. அவர்கள்தான் தாம் சார்ந்திருக்கும் அமைப்புகளுக்காக எப்போதும் வக்காளத்து வாங்குபவர்கள். இதனை யாழ் முஸ்லிம் சமுகம் நன்கு அறிந்து வைத்துள்ளது. வாதி தன்னுடைய வாதத்தை முன்வைக்க வேண்டுமானால் எத்தகைய பொய்யையும் சொல்வான் என்பது உலக மரபு
Dear editor,
ReplyDeletewe respect your site and it is recognised as the official site for Jaffna muslims. So, please maintain your standard. Do not let your reputation got damaged by publishing articles from controversal persons.
Please do not publish any articles from this person, Abu Abdullah, with any of his other other names too.
Thank you.
இங்கே குறிப்புக்களை அனுமதிக்கின்றீர்கள் இல்லை என்று புரிகின்றது.
ReplyDeleteநான் ஆங்கிலத்தில் அனுப்பிய குறிப்பைக் கூட நீங்கள் பிரசுரிக்கவில்லை.
குறிப்புகளை அனுமதிக்க முடியாவிட்டால், குறித்த இரு கட்டுரைகளையும் நீக்கிவிடுவதுதான் சரியானதாகும்.
நீங்கள் செய்வது ஜனநாயக விரோதமும், உடக தர்மத்துக்கு எதிரானதுமாகும்.
Dear Muslims,
ReplyDeletePlease try to understand there are many Abu Abdullahs ...I thing this Abu Abdullah is not a controversial Abu Abdullah..Any how The name of Abu Abdullah has been damaged by his foolish acts..
Dear Publisher , Please clarify this matter..Is it Same Abu Abdullah ? If it is same person Jaffna Muslim in the reverse gear ...
Muslim Activist
Dear Muslim Activist,
ReplyDeleteThank you for your understanding that Abu Abdullah was a controversal figure.
But you are wrong in stating "this Abu Abdullah is not controversal...".
If you read his two articles and comments, you would understand the contoversy.
Thank you.