கொழும்பிலுள்ள பள்ளிவாசல் தப்பியது..!
நவமணி
கொழும்பு - 7 புளர்ஸ் வீதி எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தையிலுள்ள பள்ளிவாசல் உள்ள இடத்தையும் ரஷ்ய தூதுவராலயத்துக்கு வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தனக்கு ஆலோசனை தெரிவித்த போதும் பள்ளிவாசலை ஒதுக்கி விட்டு எஞ்சிய நிலப்பரப்பையே ரஷ்ய தூதுவராலயத்துக்கு வழங்க பணிப்புரை வழங்கியதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் புளர்ஸ் வீதிப் பள்ளிவாசலுக்கு பௌத்த பிக்குகள் எனக் கூறிக் கொண்டு காவி அணிந்து இருவர் வந்து சென்றது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் பாராளுமன்றத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்த்ன மற்றும் சிரேஷ்ட அமைச்சர் டி.யு. குணசேகரவின் கவனத்துக்கு கொண்டு வந்த போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி அமைச்சராக நான் இருக்கும்போது புளர்ஸ் வீதியில் ரஷ்ய தூதுவராலய நிர்மாணத்திற்காக வழங்கப்பட்டுள்ள காணியைப பார்வையிடச் சென்றபோது அதிகாரிகள் முதலில் என்னை பள்ளிவாசலிருக்கும் இடத்துக்கே அழைத்துச் சென்று பள்ளிவாசல் இருக்கும் இடத்தை உள்ளடக்கி காணியை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்கள்.
ஆனால் பள்ளிவாசலை அப்படியிருக்க அனுமதிக்குமாறு நான் உத்தரவு வழங்கினேன் என்றும் அமைச்சர் தெரிவித்ததாக அல்ஹாஜ் அஸ்வர் நவமணிக்குத் தெரிவித்தார்.
ஐயா!ஜனாதிபதியவர்களே முழு இலங்கையையும் பிளாட் போட்டு விற்றுவிட்டீர்களா?புனித பூமியை என்ன செய்வதாக
ReplyDeleteஉத்தேசம்.அப்போ நீங்களும் உங்கள் பரிவாரங்களும் எங்கே போகப்போகிறீர்கள்?புரோக்கரும் நீங்களே விற்பவரும் நீங்களே.எங்களுக்கும் ஏதாவது மிச்சம் மீதி வைத்தவிட்டு போங்கள் மா மன்னரே .
Meraan
nalla ennatthukku
ReplyDeletealhamdulillah
இதே போல், மகரகம கபூரிய்யா அரபிக் கல்லூரியின் காணியையும் நகர அபிவிருத்திக்காக வழங்க வேண்டுமென அதிகாரிகள் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
ReplyDeleteஇதென்ன கொடுமை? புனித பூமி அமைக்கவும், நகர அபிருத்திக்கு என்றும் முஸ்லிம்களின் சொத்துக்களே பறிக்கப்படுகின்றன. முஸ்லிம்களை ஒழிப்பதற்கென்று தெளிவான ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
அடுத்த இலக்கு எதுவோ.........? சில வேளை எமது பள்ளிவாசல்களாகவும் இருக்கலாம்....
இலங்கையில் நடப்பது மகிந்தவின் ஆட்சியா இல்லை பௌத்த பிக்குகளின் ஆட்சியா?..பிக்குகளின் இனவாத கருத்துக்களுக்கு எதிராக ஏன் ஜனாதிபதி அவர்கள் மௌனமாக இருக்கிறார்.'இந்த நாட்டிலே இனஇ மதஇ வேறுபாடு இல்லை நாம் எல்லோரும் ஒரே நாட்டவர்கள்' என ஒவ்வொ மேடைகளிலும் வாய் கிழியக் கத்தும் எமது ஜனாதிபதி, இந்த இனவாத பிக்குகளிடம் சரணடைவது ஏன்? எமது 'மாண்புமிகு முஸ்லிம் அரசியல்வாதிகளும் இது பற்றி ஜனாதிபதியிடம் எதுவும் முறையிடாமல் அவரின் புகழ் பாடுவதிலேயே காலம் கடத்துகிறார்கள்.
ReplyDeleteமுஸ்லிம் அரசியல்வாதிகளே: இதுவரை காலமும் உங்கள் சுய நலத்திற்காக மட்டும் அரசியல் வியாபாரம் செய்த நீங்கள் இனியாவது எமது முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக (குறிப்பாக மார்க்க உரிமைகள்) உங்களது அரசியல் பலத்தை உபயோகியுங்கள்....இதற்கான கூலியை அல்லாஹ்விடம் மாத்திரம் எதிர் பார்த்தவர்களாக....