Header Ads



முஸ்லிம் காங்கிஸுக்கு முதலமைச்சர் பதவி வழங்க மஹிந்த உறுதியளிக்காவிட்டால்...??

உதயன்

"கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கே வழங்கப்படும் என மாகாண சபையைக் கலைப்பதற்கு முன் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கவேண்டும். இல்லையேல், முஸ்லிம் காங்கிரஸ் அரசில் இருந்து விலகி தனித்து அல்லது எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போட்டியிடும்.'' இதுவே முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படாதபோதிலும், இத்தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில்  கட்சிகள் களமிறங்கியுள்ளன. தாம் விரும்பும் கட்சியில் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

பிரதான கட்சிகள் முதலமைச்சர் பதவியைக் குறிவைத்து காய் நகர்த்தல்களை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன. இரகசியப் பேச்சுகளும் இடம்பெறுகின்றன. முஸ்லிம் முதலமைச்சர், தமிழ் முதலமைச்சர் என்ற போட்டியின் மத்தியில் முஸ்லிம் முதலமைச்சர் பதவியைத் தமது கட்சியே கைப்பற்றவேண்டும் என முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியில் இறங்கியுள்ளன.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்தப் போட்டியில் இறங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

அந்தவகையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றது.

அரசுடன் இணைந்து போட்டியிட்டாலும், எதிர்த் தரப்பில் நின்று போட்டியிட்டாலும் தாமே பெரும்பான்மையைக் கைப்பற்றும் பலத்தைக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரம், அரசுடன் இணைந்து போட்டியிட்டால் முஸ்லிம் காங்கிரஸுக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று ஜனாதிபதி சபையைக் கலைப்பதற்கு முன் தமக்கு உறுதியளிக்கவேண்டும்.  இல்லையேல், தனித்து அல்லது இதே நிபந்தனையின் அடிப்படையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம் என்று கூறியுள்ளது.

4 comments:

  1. ஒரு இறைவனின் பள்ளிவசளுக்காக அரசாங்கத்தில் விலக மறுத்தவர்கள் அல்லலது பதவியை துறக்க மறுத்தவர்கள் முதலமைச்சர் பதவிக்காக அரசை விட்டு விலக தயாராக இருக்கிறார்களே .இவர்களை நம்பினால் அல்லாஹ்தான் இலங்ககை முஸ்லிம்களஹியே எங்களை காப்பாற்றவேண்டும்

    ReplyDelete
  2. கேவலமான அரசியல் விளையாட்டில் மீண்டும் முஸ்லிம் அரசியல் வாதிகள்.

    முஸ்லிம் முதலமைச்சர் என்பது வெறும் பகல் கனவு போலத்தான் தெரிகின்றது.

    முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்ச்சியுடன் இணைந்து போட்டியிட்டால், அதை விட மடத்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

    ReplyDelete
  3. அகில இலங்கை மக்கள் காங்கிரசும் முஸ்லிம் காங்கிரசும் ஒற்றுமைப்பட்டு, அரசுடன் சேர்ந்து முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடாமல் இருந்தால், முஸ்லிம் முதலமைச்சர் என்ற நிலைப்பாட்டை முஸ்லிம்கள் கைவிட வேண்டியதுதான்.

    சென்ற முறைபோல் ஒற்றுமைப்படாமல் இருந்தது போல, இம்முறையும் ஒற்றுமைப்படாமல் இருந்து, முதலமைச்சர் பதவியை வேறு இனத்திற்குத் தாரை வார்ப்போம்.

    ஒற்றுமைக்கும் நமக்கும் எட்டாக் கனிதானே!

    ReplyDelete
  4. வழமை போல் வீர வசனங்களும் ,வாய்ச்சவடால்களும் நிறைந்த அறிக்கைகள் வெளியிட்டு எங்கள் வல்லமையைக்
    காட்டுவோம் .அறிக்ககைகள் விடுவதே தொழில் மாதிரிப் போய்விட்டது .தம்புள்ள பிரச்சனைக்கு பின் உங்களை நீங்களே உரசிப் பார்த்துக்கொள்வது நல்லது .உங்கள் செல்வாக்கு மக்கள் மனதில் எந்தளவு உள்ளதென்று தெரிந்து
    கொள்வது எல்லோருக்கும் நல்லது .இருக்கிற பதவியும் பறி போகாமல் பார்த்து அறிக்கை விடுங்கள் .
    Meeraan

    ReplyDelete

Powered by Blogger.