Header Ads



நல்லிணக்க ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையையோ அல்லது அதன் சிபாரிசுகளையோ முஸ்லிம் மக்களின் முழுமையான பிரச்சினைகளுக்குரிய தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பிலான ஆளுங்கட்சியிலுள்ள பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாட்டை விளக்குமாறு கடந்த வாரம் அரசு கேட்டுக்கொண்டது.

இதற்கமைய கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று விசேட அறிக்கையொன்றை கையளிக்கவுள்ளது. காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி இதனைக் கையளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் இந்த அறிக்கையில் கருத்து வெளியிட்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், "முஸ்லிம் சமூகத்தின் முழுமையான பிரச்சினைகளுக்கு இந்த ஆணைக்குழு தீர்வைத் தரவில்லை. இது தீர்வாகவும் அமையாது'' என்று சுட்டிக்காட்டியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவானது யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்தும் போர்க்குற்றங்கள் என்பன பற்றியுமே ஆராய்ந்துள்ளன. ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தோர் கூட ஆங்காங்கே சில விடயங்களை தொட்டுச் சென்றுள்ளனர். எனவே, முஸ்லிம்களின் பிரச்சினை, அதற்கான தீர்வுகள், இனப்பிரச்சினைக்கான முழுமையானத் தீர்வு என்ன என்பன பற்றியெல்லாம் ஆணைக்குழு முழுமையாக ஆராயவில்லை.

 எனவே, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக நல்லிணக்க ஆணைக்குழுவை அல்லது அதன் சிபாரிசுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது' என்றும் முஸ்லிம் காங்கிரஸ் இன்று சமர்ப்பிக்கவுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுலுக்கு வரவேண்டியுள்ளதன் தேவையையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

 

No comments

Powered by Blogger.