Header Ads



முஸ்லிம்களின் மத வழிபாட்டுக்கு தடை விதிக்கப்படுவதை கண்டிக்கிறேன் - ஜெயலத் எம்.பி.

இலங்கையர்கள் சகலருக்கும் தமது மத வழபாடுகளில் ஈடுபட அரசியலமைப்பில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும் துரதிஷ்டவசமாக எமது நாட்டு முஸ்லிம் மக்களுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதாக அண்மைக்கால சம்பவங்கள் தெரிவிக்கின்றன' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'அண்மையில் தம்புள்ளை நகரில் இடம்பெற்ற சம்பவம் ஓர் உதாரணமாகும். இந்த வாரத்தில் தெஹிவளையில் முஸ்லிம் மக்களுக்கு அந்த நிலைமை ஏற்பட்டது. குறுகிய நோக்கு கொண்ட, இனவாத பிரிவினர் தெஹிவளை முஸ்லிம் மக்களுக்கு தமது மத வழிபாடுகளை மேற்கொள்ளும் உரிமையை இல்லாமல் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை நாம் கண்டிக்கின்றோம். இதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது.

பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் தமது மதத்தை பின்பற்ற உரிமைகள் உள்ளன. இதனை பறிக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்க முடியாது. அனைத்து இலங்கையர்களுக்கும் பயம், சந்தேகம், பீதியின்றி இனைத்து பகுதிகளிலும் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்பட்ட வேண்டும்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் அனைவருக்கும் தத்தமது மதத்தை பின்பற்றுவதற்கான உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி என்றும் இலங்கையர்கள் அனைவரும் தத்தமது மதங்களை பின்பற்றுவதற்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. வரவேற்கதக்க கருத்து . ஆட்சியை பிடித்த பிறகு மாராமல் இருந்தால்
    சரி.

    ReplyDelete
  2. புலிகளின் காலத்தில் அடிக்கடி மடுவுக்கு ஓடிப் போவீர்களே, ஞாபகமிருக்கின்றதா?

    சரி நல்லது, இப்பொழுது மற்றவர்களைக் கண்டித்து முஸ்லிம்களுக்கு விசுவாசமானவர் என்பதாக காட்டிக்கொள்ள தடுமாறாமல்,
    முதல் வேலையாக மன்னாருக்குப் போய், ஆயரைச் சந்தித்து முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திட்கு எதிரான விசக் கருத்துக்களையும், சதிகளையும்
    நிறுத்தச் சொல்லுங்கள். அதன் பிறகு பார்ப்போம் உங்கள் விசுவாசம் வாக்குகளைத் தருவதற்கு போதுமானதா என்று.

    ReplyDelete

Powered by Blogger.