Header Ads



பஷர் ஆஸாத்தே.. தீங்கிளைப்பதிலிருந்து மக்களை நீ விட்டுவிடு - யூசுஃப் அல் கர்ளாவி

இஹ்வான் தமிழ்

பஷர் அஸதின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாக ஷெய்க் யூசுஃப் அல் கர்ளாவி தெரிவித்துள்ளார். பஷர் அஸதின் மிருகத்தனத்தை விசாரணை செய்ய சிரிய மக்கள் உறுதி உறுதி பூண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

டோஹாவின் உமர் இப்னு கத்தாப் பள்ளியில் இடம்பெற்ற குத்பா பிரசங்கத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பஷர் அஸதை விழித்துப் பேசிய கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி,

'சிரியா உன் தேசமல்ல, அதன் மக்களும் உன்னுடையவர்களல்ல. அனைவரும் உனக்கு எதிரானவர்கள். உனது முடிவையே அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தீங்கிளைப்பதிலிருந்து மக்களை நீ விட்டுவிடு. உன்னை அவர்கள் பிடிக்க முன் போய்த் தொலைந்து விடு' என்றார்.

எல்லா வகையான குற்றங்களை செய்த பின் கடாபி பெற்றுக் கொண்ட முடிவையே அஸதும் பெறப்போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். அஸத் குடும்பத்தின் ஆட்சிக்கெதிரான புரட்சி வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை என்றும் அவர் நன்மாராயம் கூறினார்.

இஸ்ரேல் அசத்தியத்தின் மீதெழுந்த செல்லுபடியற்ற ஒரு படைப்பு என்று கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அநீதியின் மீதெழுந்துள்ளது.  காலம் எவ்வளவு நீண்டாலும் அது இல்லாமல் போவது நிச்சயம் என்பதை அனைத்து மதங்களும் குறிப்பிடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் முடிவு அண்மித்திருக்க வேண்டும். இந்த அநியாயம் மிக விரைவில் நீங்கிட வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். முஸ்லிம்களே! எழுந்திருக்கும் இந்த அநியாயம் நிலைத்திருக்கப் போவதில்லை. மிக்க் கடுமையானவனான அல்லாஹ் தஆலா அவர்களைத் தணடிப்பான் என்பதில் உறுதியான நம்பிக்கை வையுங்கள் எனவும் அதில் வேண்டிக் கொண்டார்.

3 comments:

  1. முதலில் நீங்கள் குடியிருக்கும் அமெரிக்க ஏவல் நாயான கட்டார் அமீருக்கு புத்திமதி சொல்லுங்கள்,அமீரின் கைத்தடியான இஸ்லாமிய மத அறிஞரே!அதற்காக சிரியன் அலவி பிரிவை சேர்ந்த அசாத் செய்வது சரியாகாது.நாம்
    73 கூட்டமா?அல்லது அதைவிட அதிகமாகப் போவோமா?

    ReplyDelete
  2. அல்லாஹ்வை அதிகமாக அஞ்சுபவர்கள் அறிஞர்கள் தான் என்று அல்லாஹ் கூறுகிறான்.அல்லாஹ்வின் வார்தைகளை நாம் சிந்தித்துப் பார்த்தால் இப்படி பச்சோந்தி போல்; மாறி மாறி பேசுபவர்கள் கண்டிப்பாக அறிஞர்களாகவே இருக்க முடியாது.
    Meraan

    ReplyDelete
  3. imam yusuf qardawi unkal pirarthanai insha allah niraiverum. naveena islamiya eluchchikkuth thalamai thankum unkal paniyai thodarunkal.

    ReplyDelete

Powered by Blogger.