யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் தவறுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறதா..??
"அபூ அப்துல்லாஹ்"
யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றம்- சிவில் சமூக முன்னெடுப்புகள்”
அறிமுகம்
யாழ்முஸ்லிம் சிவில் சமூகத்தின் செயற்பாடுகள் குறித்து ஆய்வுக்குட்படுத்துகின்றபோது பல்வேறு உண்மைகளைக் கண்டுகொள்ள முடியும். மிக அடிப்படையாக “இஸ்லாத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றாத எல்லா சூழல்களிலும் குழப்பங்கள் நிறைந்திருக்கும்” இந்த விதிக்கு அமைய யாழ் முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகளை நோக்கும்போது அங்கும் இந்த விதி யாதார்த்தமாகியிருப்பதைக் காணமுடியும்.
யாழ்முஸ்லிம் சிவில் சமூகத்தின் செயற்பாடுகள் குறித்து ஆய்வுக்குட்படுத்துகின்றபோது பல்வேறு உண்மைகளைக் கண்டுகொள்ள முடியும். மிக அடிப்படையாக “இஸ்லாத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றாத எல்லா சூழல்களிலும் குழப்பங்கள் நிறைந்திருக்கும்” இந்த விதிக்கு அமைய யாழ் முஸ்லிம் சமூகத்தின் செயற்பாடுகளை நோக்கும்போது அங்கும் இந்த விதி யாதார்த்தமாகியிருப்பதைக் காணமுடியும்.
தவறுகளைத் தவறு என்று ஏற்றுக்கொள்ளாதவரை எம்மால் சரியானதை நோக்கி மீளமுடியாது, அந்தவகையில் யாழ் முஸ்லிம் சிவில் சமூகம் 1990களுக்கு முன்னரும் பின்னரும் தவறுகளைக் கண்டுகொள்ளவில்லை என்ற உண்மையை இங்கே சொல்வது பொறுத்தம். அநியாயத்தைத் தட்டிக்கேட்கவும், மக்களுக்கு அழிவுதரும் செயற்பாடுகளை ஒடுக்கவும், சுயநல, அரசியல் நோக்கம் கொண்ட தலைமைத்துவங்களைத் தட்டிக் கேட்கவும் அவற்றைவிட்டும் சமூகத்தைக் காப்பாற்றாவும் எமது சிவில் சமூகம் பல சந்தர்ப்பங்களில் தவறியிருக்கின்றது. இதன் விளைவாக எமது சமூகம் முன்னோக்கி நகர்வது பல சந்தர்ப்பங்களிலும் தடுக்கப்பட்டிருக்கின்றது.
1990களுக்கு முன்னர் இஸ்லாமிய இயக்கம் என்னும் பெயரில் எமது மண்ணில் கட்டவிழ்த்து விடப்பட்ட அநீதிகளை எவரும் தட்டிக்கேட்கவில்லை, இங்கே இருந்த சிவில் சமூகத்தார் ஒன்றில் இரு சாராரில் ஒருவர் பக்கம் அல்லது இந்தப் பிரச்சினை நமக்கென்ன என்ற கூட்டத்தார் பக்கம் நின்றுவிட்டனர், அதன் விளைவுகள் மிகவும் கொடியதாக மாறிப்போயிற்று. அதேபோன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெற்றே வந்திருக்கின்றன. இதன் கடைசி நிகழ்வாக யாழ்ப்பாணத்தில் இந்த மாதம் நிகழ்ந்த புலமைப்பரிசில் கூட்டத்தின் போதான வன்முறை நிகழ்வு அமைகின்றது. இவ்வாறான நிகழ்வுகள் ஏன் இடம்பெறுகின்ற என்று நோக்கும்போது சுயநலம், அதிகார, பதவி மோகம் போன்ற இஸ்லாம் வெறுக்கின்ற குணங்கள் அடிப்படையாக அமைவதைக் காண முடிகின்றது.
இத்தகைய சுமையான நிலைகளைக் கருத்தில் கொண்டவர்களாக, யாழ் முஸ்லிம் சமூகம் ஒழுங்கமைக்கப்படவேண்டும், அது மீண்டும் தமது தாயக மண்ணில் கால்பதிக்கவேண்டும் என்ற உன்னத இலக்குடன் கடுமையான பிரயத்தனங்களுடன் உருவாக்கப்பட்டதே “யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம்” ஆகும். இது யாழ் முஸ்லிம்கள் எல்லோருடைய பங்களிப்புடனும் உருவாக்கப்பட்டது. சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் பிராதான அமைப்புகள் ஒன்றிணைந்து பின்வரும் செயற்திட்டமொன்றினை முன்வைக்கின்றனர்.
யாழ் முஸ்லிம் சிவில் சமூகம் யாழ் முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்கு முன்வந்துள்ளது. 2009ம் ஆண்டு முதல் இலங்கைத் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் யுத்தமற்ற சூழல் பொதுவாக இலங்கை மக்கள் மத்தியிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாண மக்கள் வாழ்வில் புதியவொரு அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது. யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் தமது பூமிகளில் மீளக்குடியேறத் தொடங்கியுள்ளனர். அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புகளுடன் பல்வேறு வேலைத்திட்டங்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றன.
1990களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்களும் மீண்டும் தமது தாயக மண்ணில் மீளவும் குடியேறுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கின்றார்கள்.
1990களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் குறிப்பாக யாழ் மாநகர எல்லைக்குள் மிகுந்த செல்வாக்கு மிக்க சமூகமாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள். கி.பி 3ம் நூற்றாண்டு தொட்டே யாழ்ப்பாண மண்ணுக்கும் அறபு வர்த்தகர்களுக்கும் தொடர்பு காணப்பட்டதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு இலங்கை முஸ்லிம் சமூக வரலாற்றிலும் மிக நீண்ட கால வரலாற்றைக்கொண்ட சமூகமாக யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் இடம்பெற்றிருக்கின்றது.
பருத்தித்துறை , உசன் ஆகிய பிரதேசங்களில் ஆரம்பமாக குடியேறிய முஸ்லிம்கள் உசன் பகுதியில் ஏற்பட்ட சாதகமற்ற சூழ்நிலைகளின் காரணமாக குறித்த குடியிருப்புகளைக் கைவிட்டு சாவகச்சேரி பகுதியை நோக்கி இடம்பெயர்ந்தனர். பின்னர் அங்கிருந்து நல்லூரை நோக்கி முஸ்லிம் குடியிருப்புகள் நகர்த்தப்பட்டன, நல்லூர் பிரதேசங்களில் செல்வாக்கு மிக்க சமூகமாக வாழ்ந்துகொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தின் மீது தீவிர இந்துத்துவ சிந்தனை கொண்டவர்களால் முஸ்லிம்களின் சாதரண வாழ்வியலுக்கு இடையூறுகள் மேற்கொள்ளப்பட்டன, இதன் காரணமாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் யாழ் நகருக்கு அன்மித்த பகுதிகளைநோக்கி இடம்பெயர்ந்தனர். இவ்வாறாக மூன்று சந்தர்ப்பங்களில் இடப்பெயர்வுகளை எதிர்கொண்ட முஸ்லிம் சமூகம் எந்தச்சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக போராடவோ அல்லது குரல் எழுப்பவோ இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும். அதன் தொடரில் 1990களில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையானது யாழ் முஸ்லிம்களின் வாழ்வியலில் பாரிய தாக்கங்களை யுண்டுபண்ணியிருக்கின்றது.
யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம்; இலங்கை முஸ்லிம் சமூகத்தில், குறித்துச் சொல்லக்கூடிய ஒரு சமூகமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்தது. முதல் முஸ்லிம் சட்டட்த்தரணி எம்.சீ அப்துல்காதர் (துருக்கித்தொப்பி அப்துல் காதர்) முதல் முஸ்லிம் சிவில் சேவை அதிகாரியை (ஏ.எம்.ஏ.அஸீஸ்), முதல் முஸ்லிம் பெண் பட்டதாரியை, முதல் முஸ்லிம் பெண் வைத்தியரை (திருமதி மைமூனா றஹீம்), முதல் முஸ்லிம் அரசாங்க அதிபரை (ஏம்.மக்பூல்), இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய பெருமை யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திற்குரியதாகும்.
தேசிய ரீதியில் இத்தகைய பாரம்பரியங்களைக்கொண்ட ஒரு சமூகம் யாழ்ப்பாண மண்ணிலும் முக்கியத்துவம் கொண்ட ஒரு சமூகமாக வாழ்ந்தார்கள், வர்த்தகத்தில் ஆர்வங்கொண்ட, அதிக்கம் கொண்ட ஒரு சமூகமாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் திகழ்ந்தார்கள். நகை மற்றும் தங்க வியாபாரம், புடவை வியாபாரம், இரும்பு மற்றும் கட்டிடப்பொருட்கள் வியாபாரம், போன்ற வர்த்தக பிரிவுகளில் முஸ்லிம்கள் தீர்மானிக்கும் நிலை காணப்பட்டது. அத்தோடு தையல், மற்றும் தோற்பொருட்கள் உற்பத்தி, தகரவேலைகள், போன்ற துறைகளிலும் முஸ்லிம்கள் செல்வாக்கு மிக்கவர்களாகவே திகழ்ந்தார்கள்.
யாழ்ப்பாண அரசியலிலும் முஸ்லிம்கள் மிகுந்த செல்வாக்கு மிக்க சமூகமாகவே அடையாளப்படுத்தப்படுகின்றார்கள் 1958களில் யாழ் மாநகர சபையின் முதல்வராக (சட்டத்தரணி எம்.எம்.சுல்தான்) ஒரு முஸ்லிம் தெரிவு செய்யப்பட்டார், அதுமட்டுமல்ல பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதி மேயர்களாகவும் முக்கிய பொறுப்பு வாய்ந்த மாவட்ட கவுன்சில் அங்கத்தவர்களாகவும் முஸ்லிம் பதவி வகித்து யாழ் மாநகரத்தின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திக்கும் பங்காற்றியுள்ளார்கள். தேசிய அரசியல் கட்சிகளுடன் நெருக்கமான உறவுகளைக்கொண்ட யாழ் முஸ்லிம் சமூகம் பிராந்திய அரசியலிலும் குறித்துச் சொல்லத்தக்க செல்வாக்குள்ளவர்களாகவே காணப்பட்டார்கள். தமிழ் சமூகத்தின் அரசியல் முன்னெடுப்புகள் பலவற்றில் முஸ்லிம்களின் காத்திரமான பங்களிப்புகள் இன்றும் நினைவு கூறப்படுகின்றன.
சிறுபான்மை சமூகத்தின் உரிமைப்போராட்ட விடயத்தில் முஸ்லிம் சமூகம் எவ்வித முரண்பாடுகளுமற்று அதனை ஆதரிக்கின்ற நிலை காணப்படுகின்றது. அதேவேளை அந்த உரிமைப்போராட்டத்தின் ஊடகமாக ஆயுதப் போராட்ட வடிவம் முதன்மை பெற்று; சமூகங்களிடையே வன்முறைகளின் அடிப்படைகளில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள நாடியபோது, ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமாக வாழ்கின்ற தீர்வை விடுத்து; பிரிவினைவாதத்தினை அடிப்படையாகக் கொண்டு சமூகங்களை மோதவிடுகின்ற, மனித அவலங்களைத் தோற்றுவிக்கின்ற, யுத்தம் உரிமைப் போராட்டத்தை வென்றெடுக்கும் ஊடகமாக மாறியபோது; முஸ்லிம்கள் அதற்கு ஆதரவளிக்கின்ற நிலையிலிருந்து விலகிக்கொண்டார்கள்.
அதேவேளை குறித்த போராட்ட ஒழுங்கை விமர்சிக்கவோ, அல்லது குறித்த போராட்ட ஒழுங்கிற்கு எதிராக செயற்படவே, எப்போதும் முஸ்லிம்கள் துணியவில்லை. அவ்வாறு செயற்பட்ட ஒரு சந்தர்ப்பத்தையேனும் அவர்கள் ஏற்படுத்தவும் இல்லை. இவ்வாறாக யாழ் பிராந்திய அரசியல் உரிமைப்போராட்ட நிலைகளில் முஸ்லிம்கள் தமது வகிபாகத்தை மிக நிதானித்த அமைப்பில் ஏற்படுத்தியிருந்தனர்.
1990 ஒக்டோபர் 30 நாள் நிகழத்தப்பட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையானது யாழ்ப்பாண முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியதுடன், தென்னிலங்கையில் அவர்களை மிக நீண்டகால தற்காலிக வாழ்வியல் ஒழுங்கை பேணும் நிலைக்குத் தள்ளியது.
1990கள் முதல் 1997 வரை யாழ்ப்பாணம் முழுமையான புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக கானப்பட்டது. 1997களில் மீண்டும் இரணுவக்கட்டுப்பாட்டு பிரதேசமாக யாழ்ப்பாணம் மாறியது, இந்தக்காலத்திலும் முஸ்லிம்கள் மீளவும் குடியேறுவதற்கான வாய்ப்புகள் காணப்பட்ட போதிலும் அரசாங்கமோ அல்லது புலிகளோ முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கான எவ்வித சமிக்ஞைகளையும், உதவிகளையும் ஏற்படுத்தவில்லை.
1997-2002 வரையான காலம் வரை 5 ஆண்டுகள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த யாழ்ப்பாணத்தை நோக்கி மீளமுடியுமா என்ற கேள்விக் குறியோடு இருந்த யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள், 2002களில் ஏற்படுத்தப்பட்ட புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து யாழ்ப்பாணம் செல்ல முடியுமான சூழல் உருவாகும் என்று எண்ணியிருந்தார்கள்.
இருப்பினும் விடுதலைப் புலிகளிடமிருந்து மீள்குடியேற்றம் குறித்து வெளிப்பட்ட சமிக்ஞைகள் எதுவும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கவில்லை. அத்தோடு இராணிவக்கட்டுப்பாட்டு வலயம், புலிகளின் கட்டுப்பாட்டு வலயம் என இரு தொகுதிகள் காணப்பட்டமையானது போக்குவரத்து சவால்களையும் எதிர்நோக்கச்செய்தது. எனவே முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் குறித்து அதீத அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.
2002-2006 வரை இவ்வாறான நிலையே உணரப்பட்டது. 2006 முதல் தீவிர யுத்தம் மீண்டும் தொடக்கப்பட்டது. 2009 மே மாதம் 18ம் திகதி விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய மறைவைத் தொடர்ந்து முடிவிற்கு கொண்டுவரப்பட்ட யுத்த நிலைமைகளானது மீண்டும் யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள்குடியேற்றம் குறித்து சிந்திக்கவும் காத்திரமான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளும் நிலையை தோற்றுவித்துள்ளது.
இரண்டு மணித்தியாள வெளியேற்றம் சுமார் 20 வருட கால அகதி வாழ்வு என்பன முஸ்லிம்கள் உடனடியாக மீள்குடியேறுவதற்கு உரிய சாத்தியப்பாடுகளை தோற்றுவிக்கவில்லை. இந்நிலையில் எவ்வித திட்டமிடல்களுமின்றிய மீள்குடியேற்ற முன்னெடுப்புகளே இதுவரை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலமாக சிறப்பானதும் வினைத்திறனுடன் கூடிய மீள்குடியேற்ற செயற்திட்டத்தை அமுலாக்குவது சாத்தியமற்றது. இதனை நன்குணர்ந்த யாழ்ப்பாணம் சிவில் அமைப்புகள் அரசியல் சமூக இனத்துவ வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று சாத்தியமான மீள்குடியேற்ற செயற்திட்டமொன்றினை “யாழ் முஸ்லிம் மீள்குடியேற்றம் - சிவில் சமூக முன்னெடுப்புகள்” என்னும் மகுடத்துடன் முன்னெடுக்க தீர்மானித்துள்ளார்கள்.
இச்செயற்திட்டத்தை கூட்டாக முன்னெடுக்கின்ற உடன்பாட்டினை பின்வரும் நான்கு அமைப்புகள் எட்டியுள்ளன.
1. சமூக கல்வி அபிவிருத்தி அமைப்பு (செடோ) 1998கள் முதல் யாழ் முஸ்லிம்களின் சமூக கல்வி மேம்பாடுகளில் அக்கறையுடன் தொழிற்பட்ட ஒரு சமூக சேவை நிறுவனமாகும்.
2. தகவல் வழிகாட்டல் மத்திய நிலையம் - யாழ்ப்பாணம், 2010 முதல் யாழ்ப்பாணம் முஸ்லிம்களை சிந்தனா ரீதியாக வழிகாட்டுவதை இலக்காகக்கொண்ட அமைப்பாகும்
3. யாழ் முஸ்லிம் நிபுணர்கள் மன்றம், 2009 முதல் யாழ் சமூகத்தில் காத்திரமான மீள்குடியேற்றம் சமூகக் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பாகும்.
4. ஹிறா கல்வி மறுமலர்ச்சி அகடமி – யாழ்ப்பாணத்திலும், யாழ்ப்பாணத்திற்கு வெளியிலும் வாழ்கின்ற முஸ்லிம் மாணவர்களின் கல்வி மறுமலர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பாக இது அமைகின்றது.
யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்ற செயற்திட்டமான பின்வரும் நான்கு பிரதான அடிப்படைகளில் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்ற கருத்திட்டத்தை முன்வைக்கின்றார்கள்
1. மீள் உரிமை கோருதல் அல்லது மீள் அடையாளப்படுத்தல்
2. மீளத்திரும்புதல்
3. மீள் நிர்மாணம்
4. நல்லிணக்கம்
2. மீளத்திரும்புதல்
3. மீள் நிர்மாணம்
4. நல்லிணக்கம்
என்பனவே குறித்த 4 அடிப்படைகளுமாகும், இதன் அடிப்படையில் விரிவான செயற்திட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழ் முஸ்லிம் இணைய ஆசிரியருக்கு..!
ReplyDeleteகட்டுரையில் கூறப்பட்டுள்ள பல விடயங்கள் உண்மைதான். இருந்தபோதும் இந்தகட்டுரை சில வரலாற்று தவறுகளுக்கும் அடித்தளமிடுகிறது. இக்கட்டுரையை வாசிக்கும் சிலர் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு 4 அமைப்புக்கள் மாத்திரம்தான் உதவி செய்கின்றன என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும். உதராணமாக செடோ அமைப்பு யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஆற்றிய சேவைகளைவிட யாழ்ப்பாண முஸ்லிம்களையும், அமைப்புக்களையும் பிளவுபடுத்து அதில் குளிர்காயும் அமைப்பு. தயவுசெய்து இந்த உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள்.
Ismail - Negombo
யாழ்ப்பாணத்தான்
ReplyDeleteசவூதி அரேபியா.
கட்டுரையாளர் அபூ அப்துல்லாஹ் இக்கட்டுரை மூலம் சில அமைப்புகளுக்கு சேவகம் செய்வது புரிகிறது..! சுபியான் மௌலவி உள்ளிட்ட இன்னும் பலரும் கட்டுரையாளிரின் கண்களுக்கு புலப்படாமல் போனது ஏன்..?
ரமீஸ், அஜ்மல், அஸ்மின், அமீன் ஆகியோரே உங்கள் மனச்சாட்சியிடம் கேளுங்கள..! நீங்கள் மட்டுமா யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு சேவை புரிகிறீர்கள்..? வெளிநாடுகளிலுள்ள பலர் குளிரிலும், பல துன்பங்களுக்கு மத்தியிலும் உழைத்து யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலனுக்காக பாடுபடுகிறார்கள்தான்.
ReplyDeleteஏன் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்றில் யாழ் முஸ்லிம் இணையம் கூட மகத்தான பங்காற்றி வருகிறது. யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் இந்த ஊடகத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்குள்ளது.
லண்டனில் செயற்படும் ஜப்னா முஸ்லிம் அசோசேசியன்கூட யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலனுக்காகவே செயற்படுகிறது. யாழ்ப்பாணத்தில் செயற்படும் அமைப்புக்கள்கூட வெளிநாட்டு யாழ்ப்பாண முஸ்லிம்களின் பண உதவிக்காக பல தடவைகள் விண்ணப்பித்திருந்தனர். வெளிநாடுகளிலும் உள்ள யாழ்ப்பாண முஸ்லிம்களும் பலநேரங்களில் பண உதவிகளை செய்துள்ளனர்.
இவற்றையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைக்கும் நோக்குடனே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
யாழ் முஸ்லிம் இணையமானது இதுபோன்ற கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உண்மையிலலேயே கவலையளிக்கும் விடயம்.
இங்கு
யாழ் அப்துல் ரஹ்மான்
லண்டன்
அபூ அப்துல்லாஹ் என்ற பெயரில் வரும் ஆக்கங்கள் சமூகத்தை பிழையாக வழிநடத்தும் நோக்கத்துடன் பொய்யான கற்பனைகளுடன் கடந்த காலங்களிலும் யாழ் இணையத்தில் வெளியாகி இருந்தன.
ReplyDeleteமீள்குடியேற்றத்தை ஊக்குவிக்க மீலாத் விழா கொண்டாடுகின்றோம் என நான்கு நாட்கள் வீணடிக்கப் பட்ட நிகழ்விலும் குறித்த பெயரில் கட்டுரை வெளியிடப்பட்டது.
சர்ச்சைக்குரிய ஒரு நபரே, குறித்த பெயர் உட்பட வேறும் சில பெயர்களில் ஆக்கங்களை எழுதுவதாக ஒரு பேச்சு யாழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் உண்டு, எனினும் நாகரீகம் கருதி அவரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை.
யாழ் முஸ்லிம் குறித்து சமூகத்தில் நன்மதிப்பும், ஒரு அங்கீகாரமும் நிலவுகின்றது, தயவு செய்து அது பாதிக்கப்பட இடம் கொடுக்க வேண்டாம்.
சகோதரர் இஸ்மாயீல் அவர்கள் செடோ அமைப்பு யாழ்ப்பாணத்து முஸ்லிம்களையும் அமைப்புகளையும் பிளவுபடுத்தியதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றார். இவ்வாறான பொதுப்படையான குற்றச்சாட்டுகள் செல்லாக்காசுகளே! முடிந்தால் செடோ எந்தெந்த அமைப்புகளைப் பிரித்தது, சமூகத்தில் எப்போது பிளவுகளை ஏற்படுத்தியது என்று விரிவாக விளக்கமாக சொல்லட்டும், அப்போது மக்கள் தீர்மானிப்பதற்கு இலகுவாக இருக்கும். அத்தோடு வெளிநாட்டில் கொட்டும்பனியிலும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்காக சேவை செய்வதாக சில அமைப்புகளை இங்கே குறிப்பிட்டுள்ளார்கள், அவர்களின் சேவைகள் தொடரட்டும், இந்த ஆக்கத்தில் அவர்களைக் குறைகூறுவதாக எதுவும் அமையவில்லையே. சுபியானைத் தூய்மைப்படுத்துகின்றோம் என்ற பெயரில் இன்னும் சில ஒட்டுண்ணிகளையும் தூய்மைப்படுத்தவும் ஒரு சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த ஆக்கத்தை எழுதிய அபூ அப்துல்லாஹ் யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்த, நடந்துகொண்டிருக்கின்ற இன்னும் பல அநியாயங்களையும் சூரையாடல்களையும் இங்கே முன்வைத்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும்.
ReplyDeleteமுபாரக்- கொழும்பு
The writer has mentioned "under the banner of islamic movement,injustice were escalated before 1990".which movement the writer points out?The stupid writer who was a member in movement was the one spoiled the unity of the jaffna muslim community.
ReplyDeleteசகோதரர் முபாரக் அவர்களே,
ReplyDeleteஇந்த சர்ச்சைக்குரிய ''அபூ அப்துல்லாஹ்'' எப்படிப் போனாலும், பொதுவாக சொல்வதாக இருந்தால், யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்த, நடந்துகொண்டிருக்கின்ர எல்லா அநியாயங்களையும் எழுத முடியாது.
அநியாயங்களிலேயே மிக மோசமான அநியாயம் குர் ஆன், ஹதீசுக்கு எதிராக செயல்பட்டு, சத்தியத்தை மறைப்பதும், மார்க்கத்துக்கு முரணான செயல்களை அல்லாஹ்வின் இல்லங்களில்
அரங்கேற்றுவதுமாகும். இவை பற்றி எழுதினால் போலீசுக்குக் கூட போய், இணையத்தளங்கள் கூட முடக்கப்படலாம் என்ற நிலையில், யாழ் முஸ்லிம் இணையத்தளத்தை அல்லாஹ் பாதுகாக்கட்டும்.
''இஸ்லாத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றாத எல்லா சூழல்களிலும் குழப்பங்கள் நிறைந்திருக்கும்''
ReplyDeleteஎன்று கட்டுரையாசிரியர் சொல்வது சரிதான்.
சின்னப்பள்ளிவாசல் நிகழ்வுகளிலும் இதைத்தான் கண்டோம். இஸ்லாத்தின் வழிகாட்டல்களைப் புறக்கணித்துவிட்டு, ஞாயிற்றுக் கிழமை துஆ, கபுராளி துஆ என்று இஸ்லாமிய வழிகாட்டல்களுக்கு
முரணான செயல்கள் நடைமுறைப்படுத்தப் பட பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டது, குழப்பங்கள் நிறைந்தது.
''இஸ்லாமிய வழிகாட்டல்'' என்பது குர்ஆன், சுன்னாஹ் இலிருந்து மட்டும் பெறப்பட வேண்டுமே தவிர, சிலர் பழைய வழிகேடுகளை பற்றிப் பிடித்துக்கொண்டு, இப்படித்தான் 1990 க்கு முன்னர் செய்தோம், இதுதான் இஸ்லாமிய வழிகாட்டல் என்று அடம்பிடிப்பதனால் மட்டும் அவர்களின் வழிகேடுகள் எல்லாம் ''இஸ்லாமிய வழிகாட்டல்'' ஆகிவிட முடியாது.
பொதுச்சேவை என்று வந்தால் நல்ல பெயரை விட கெட்டபெயர்தான் அதிகமாக கிடைக்கும் .உலகத்தில் யாரும் 100
ReplyDeleteவீதம் சுத்தம் கிடையாது .அல்லாஹ் மட்டும்தான் 100 வீதம்.ஆகையால் தேவையில்லாமல் ஒருத்தரை ஒருத்தர்
கலுவிக்கொண்டிருக்காமல் ,அல்லாஹ்வுக்காக மட்டும் தியாகத்தின் அடிப்படையில் உங்கள் சேவைகள் இருக்கட்டும் .
எல்லா அமைப்புகளும் ஏதாவது வகையில் அகதிகளுக்கு உதவிக்கொண்டுதான் இருக்கிறது .தயவு செய்து உங்களை நீங்கள் பெருமைப்படுத்திக்கொண்டு சிறுமையடைந்து அல்லாஹ்வின் கோபத்தை சம்பாதித்து உங்களை அழிவின்
பக்கம் சாய்த்துக் கொள்ளாதீர்கள் .ஜசக்கல்லாஹ் ஹைர்.
Daoud Tharik
சில படித்த முட்டாள்கள் தங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமென நம் சமூகத்தைப் பிரித்து தங்கள் பிழைப்பை
ReplyDeleteகொண்டு செல்கிறார்கள் .சிலர் பண்பற்ற வார்த்தைகள் மூலம் நல் உள்ளங்களை வேதனைப்படுத்தி தங்களை
சந்தோசப்படுத்தி,சமூகத்தை கேவலப்படுத்தி இழிந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறாகள் .இன்னும் சிலர்
தனி மனித பழி வாங்கல் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்து அதில் சந்தோசப்பட்டு புளங்காகிதம்
அடைகின்றனர் .அல்லாஹ் அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க நாம் அனைவரும் துஆ செய்வோம் .
Meeraan