என்னமோ நடக்குது..! ஏதோ நடக்குது..!!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கும், சட்டவிரோத இஸ்ரேலுக்கும் மலர்ந்துள்ள உறவு முஸ்லிம் உம்மாவை வேதனை கொள்ளச் செய்திருக்கும் நிலையில் கடந்த இரண்டு வாரங்களில், இரு தடவைகள் அலொன் உஸ்கிப்ஷ் என்ற இஸ்ரேலிய உயர்மட்ட அதிகாரி இலங்கை வந்து சென்றிருப்பதாக யாழ் முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.
சட்டவிரோத இஸ்ரேல் சார்பாக அலொன் உஸ்கிப்ஷ் என்ற இந்த நபர்தான் தற்போது இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதராக செயற்பட்டுவருகிறார். இவர்தான் இலங்கைக்கான தூதுவராகவும் நியமனம் பெற்றுள்ளார். இவரது தலைமையிலேயே கொழும்பில் சட்டவிரோத இஸ்ரேலின் 64 ஆவது சுதந்திர தினமும் கொண்டாடப்பட்டுள்ளது.
முஸ்லிம் அரசியல் தலைமைகள், அகில ஜம்மியத்துல் உலமா சபை, முஸ்லிம் கவுன்சில், இடதுசாரி அமைப்புக்கள் போன்றன இலங்கை அரசாங்கமானது இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவு ஏற்படுத்திக்கொண்டதை கடுமையாக விமர்சித்திருந்தன.
இந்த விமர்சனங்களையெல்லாம் பொருட்படுத்தாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம், தற்போது சட்டவிரோத இஸ்ரேலின் தூதரகம் கொழும்பில் திறக்கப்படுவதற்கு அனுமதியளிக்குமா என்பதே முஸ்லிம்களிடம் மேலோங்கியுள்ள பெறுமதிமிக்க கேள்வியாகும்.
இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்பட அனுமதி வழங்கப்படாது என அரசாங்கத்தின் சார்பில் இதுவரை எத்தகைய உறுதிமொழிகளும் வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் இஸ்ரேலிய தூதுவர் கொழும்புக்கு இரண்டு வாரங்களில் இரு தடவை வந்துசென்றமையும், கொழும்பில் அவர் தலைமையில் சட்டவிரோத இஸ்ரேலின் சுதந்திரதினம் கொண்டாடப்பட்டமையும் மிகப்பெரும் சந்தேகங்களை முஸ்லிம்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

அப்படியே தூதரகம் திறந்தாலும் இலங்கை முஸ்லிம்களால் என்ன
ReplyDeleteசெய்ய முடியும் எல்லாம் அவன் செயலென்று போய்க் கொன்டிருக்க
வேன்டியதுதான்.
யாழ் குருவி
கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் மிக வசதியாக இயங்கிக்கொண்டு, இலங்கையில் ஷீயா மதத்தைப் பரப்பி, முஸ்லீம்களை பணத்தின் மூலம் வழிகேட்டை நோக்கியும், சீரழிவுகளை நோக்கியும் செலுத்திக் கொண்டிருக்கும் ஈரானிய தூதரகத்திற்கு எதிராக எதுவும் செய்ய திரணியற்ற முஸ்லிம்கள், இஸ்ரவேலிய தூதரகத்தையும் சும்மா விட்டு விடுவார்கள், அவ்வளவுதான்,.
ReplyDeleteAnonymouse there are no shiya religion in the world only Islam if u don't know about Islam pls don't comment
ReplyDeletebrother shiya is not ISLAM.they try to spread shiya in lanka under mahinda's permission it means mahinda gave the promise to that iran fellow to protect them.
ReplyDelete