Header Ads



முஸ்லிம் பாதாள குழுக்கள் ஜிஹாத் கருத்துக்களை பரப்புகிறதாம்...!

GTN
கொழும்பு, புத்தளம், மன்னார் பிரதேசங்களில் இயங்கும் முஸ்லிம் பாதாள உலக குழுக்களின் முக்கியஸ்தர்கள் ஒரு வலைமைப்பாக இயங்கி, ஜிகாத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துக்களை முஸ்லிம் மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக அரச புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசசார்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

விசேட அறிக்கை மூலம் இது குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ள அரச புலனாய்வு பிரிவினர், போதைப் பொருளை நாட்டுக்குள் கடத்தி வந்து,தமது வர்த்தகத்தை சுதந்திரமாக செய்யும் நோக்கில் முஸ்லிம் பாதாள உலக குழுவினர் இந்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஜிகாத் என்ற எண்ணக்கருவை முஸ்லிம் மக்கள் மத்தியில் பரப்புவதற்காக குறித்த பாதாள உலக குழுவின் தலைவர்கள்  தாம் உள்ள பிரதேங்களை உத்தியோகபூர்வமற்ற அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் போல் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது. வெளியார் எவரும் அந்த பிரதேசத்திற்கு செல்ல வேண்டுமாயின் அனுமதிகளை பெறவேண்டும் எனவும் இல்லாவிட்டால் வெளியார் எவரேனும் பிரதேசத்தில் உள்ள வீடுகளில் தங்கியிருந்தால், வீட்டில் உள்ளவர்கள் அது பற்றி சமபந்தப்பட்ட பாதாள உலக தலைவர்களுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

இதனை தவிர தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் நாட்டின் சாதாரண சட்டத்திற்கு அமைய செயற்பட இந்த குழுவினர் அனுமதிப்பதில்லை. பிரதேசத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், அது குறித்து காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யாது. பாதாள உலக குழுவினருக்கு அறிவித்து, அதனை தீர்த்து கொள்ள வேண்டும் என இந்த பாதாள உலக குழுவினர் உத்தரவிட்டுள்ளதாகவும் அரசாங்கத்திற்கு சார்பான அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

4 comments:

  1. முஸ்லீம்களை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.
    தம்புள்ளை, குருநாகல் என எல்லா செயல் பாடுகளும் அரச ஆதரவுடனான ஒரு திட்டமிட்ட வேலைத்திட்டமாகக் கூட இருக்கலாம்.

    ReplyDelete
  2. முஸ்லீம்களை தெரிந்து கொண்டே வம்புக்கு இழுக்கிறார்கள் .அடப் பைத்தியக்கார புலனாய்வே ,கப்பம்,கஞ்சா ஆட் கடத்தல்,கொலை,கொள்ளை என இருப்பவர்கள் அடிப்படையில் முஸ்லீம்களாக இருக்க தகுதியற்றவர்கள்.இவர்களுக்கு ஜிஹாதாவது கத்தரிக்காயாவது.ஜிஹாத் என்ற புனிதமான வார்த்தையை யூத,நாசராக்கள் கொச்சைப்படுத்தி சாதாரண மக்கள் மனதில் தப்பான எண்ணத்தை உருவாக்கி விட்டார்கள்.
    பாதாள உலகத்தினருக்கு எதிர்க்கட்சி,ஆளும்கட்சி உட்பட அனைத்து மட்டத்திலும் தொடர்பு இருக்கிறது.தங்களுடன் ஒத்து வராவிட்டால் அவன் எந்த இனத்தை சார்ந்த்திருக்கிறானோ ,தமிழனாக இருந்தால் புலி,முஸ்லீமாக இருந்தால் ஜிஹாதி ,சிங்களவனாக நாட்டுப் பற்றாளன் என்றும் புலனாய்வு தெரிவிக்கும்.
    இது தானே இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அவல நிலை .
    Meraan

    ReplyDelete
  3. well said meraan.

    ReplyDelete
  4. muslim kalukana sothanai iwwalavu seekiram varum enru nambavillai,ipo muslim kalinda ennikai athiharichu kondu waruthu so enga meethu oru paliya potu ngalaum alikalam ndu ninaithu vittarhal.muslimkalin jihath varalaru theriuma intha makkanuhalukku.muslim kalta soopi thirira mara engaluke aapa.naangal allah oruwanai nambufawarhal enbathai awarhal maranthuvida vendam

    ReplyDelete

Powered by Blogger.