Header Ads



யாழ் முஸ்லிம் கிராம அலுவலர் நியமனம் - சுமூகமாகத் தீர்க்கப்பட்டது.

1990களில் யாழ்ப்பாணத்தில் இருந்து புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் முஸ்லிம் சிவில் நிர்வாக உத்தியோகத்தர்களின் சேவைகளும் முடக்கப்பட்டன, 2009களின் பின்னரே யாழ் மாவட்டத்தில் சிவில் சேவைகளில் முஸ்லிம்கள் இணையத் தொடங்கினர், அதுவும் குறிப்பாக பிரதேச நிர்வாக உத்தியோகத்தர்களாக கிராம அலுவலர்களின் வெற்றிடம் ஒரு பாரிய விடயமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் ஜே-87, ஜே-86, ஜே84, ஜே88 ஆகிய கிராம அலுவலர் பகுதிகளில் முஸ்லிம்கள் வசிக்கின்றனர், எனினும் ஜே 87 பகுதியில்தான் (புதிய சோனகர் தெரு) முஸ்லிம்கள் மிகவும் அதிகமாக குடியிருக்கின்றனர். எனவே முஸ்லிம் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் தேவை அப்பகுதியிலேயே அதிகம் உணரப்பட்டது.

இதன் அடிப்படையில் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் முயற்சியின் பயனாக சேவை நிமித்தம் இடம் மாற்றம் பெற்றுவரும் கிராம சேவகர் (தரம் 01) எம்.எஸ்.ஜினூஸ் அவர்கள் ஜே-87 பகுதிக்கே நியமிக்கப்படவேண்டும் என்பது மக்களினதும் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தினதும் எதிர்பார்ப்பாகும், எனினும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் திருமதி எஸ்.தெய்வேந்திரம் அவர்கள் முஸ்லிம்கள் குறைவாக குடியேறியுள்ள ஜே86 கிராம சேவகர் பகுதிக்கு குறித்த இடம் மாற்றம் பெற்றுவரும் கிராம சேவகர் (தரம் 01) எம்.எஸ்.ஜினூஸ் அவர்களை நியமித்துள்ளார். இதனை யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் அவர்களை கடந்த 03-மே-2012 அன்று அவரது காரியாலயத்தில் சந்தித்து விடயங்களை எடுத்துக்கூறி எம்.எஸ்.ஜினூஸ் அவர்களை ஜே-87 பகுதிக்கு நியமிக்கும்படி கேட்டுக் கொண்டது, விடயங்களை சாதகமாக அணுகிய அரச அதிபர் அவர்கள், பிரதேச செயலாளருக்கும் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றினை நடாத்தி உரிய தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டார்.

 அதன் பிரகாரம் இன்று 11-மே-2012 வெள்ளிக்கிழமை மாலை 03மணியளவில் யாழ்ப்பாணம் பிரதேச செயலக காரியாலயத்தில் இடம்பெற்றது, இச்சந்திப்பில் யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் நிலாம், செயலாளர், றமீஸ், முன்னால் செயலாளர் அஸ்மின் அய்யூப் ஆகியோருடன் இன்னும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதன்போது ஜே87ற்கு முஸ்லிம் கிராம அலுவலரின் தேவை குறித்து பிரதேச செயலளாருக்கு முழுமையான விளக்கம் கொடுக்கப்பட்டது, எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட பிரதேச செயலாளர் அவர்கள், உடனடியாக மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எடுத்துக்கூறி, தற்போது ஜே 86ல் முஸ்லிம் கிராம உத்தியோகத்தர் கடமையாற்றுவார் என்றும், தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் ஜே87ற்கான பிரதி கிராம உத்தியோகத்தராக கடமையாற்றுவார் என்றும், அடுத்துவரும் ஒரு சில மாதங்களுள் ஜே86, ஜே87ற்கான கிராம அலுவலராக எம்.எஸ்.எம்.ஜினூஸ் அவர்கள் நியமிக்கப்படுவார் என்றும் வாக்குறுதியளித்தார், இதனைத் தொடர்ந்து எம்.எஸ்.எம்.ஜினூஸ் அவர்கள் ஜே 86ற்கான கிராம அலுவலராக பதவியேற்றுக்கொண்டார். அவர் இன்றுமுதல் தனது கடமைகளை பொறுப்பேற்று மக்களுக்கு சேவையாற்றுவார்

4 comments:

  1. Let’s regain our lost-rights by strengthening our positions in administrative frameworks.
    Mr. Jinoos has experience and capability to serve through this position.
    May Allah grant him strength and success in his endeavor.
    -Najumudeen

    ReplyDelete
  2. நல்ல விசயம் இறைவனுக்கு பயந்து நேர்மையாக வும் நீதியாகவும்
    நடந்தால் ?சரி

    யாழ் குருவி

    ReplyDelete
  3. Congrats, all the best Brother Jinoos.

    ReplyDelete
  4. அரச நிர்வாக விடயங்களுக்கு ஒரு முஸ்லிம் நியமிக்கப் பட்டிருப்பது மகிழ்ச்சிதான், ஆனால் சின்னப் பள்ளிவாசலில் கூட்டு துஆ, சுபஹில் குனூத், கபுராளி துஆ என்று புறப்பட்டது கண்டிக்கத்தக்கது.
    அல்லாஹ்வை பயந்து கொள்ளவும்.

    ReplyDelete

Powered by Blogger.