Header Ads



அஹதிய்யா பாடசாலைக்கு எதிரான இனவாத போராட்டம் - படுதோல்வியில் முடிந்தது



தகவல் - சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்சா

குருநாகலுக்கு அண்மையில் உள்ள ஆரிய சிங்களவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள அஹதிய்யா பாடசாலைக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் சிலர் 20 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்த போராட்டம் தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

அஹதியா பாடசாலை நடத்துவதற்கு மட்டுமே முஸ்லிம்களுக்கு அனுமதி, அங்கு தொழுகை நடாத்தக்கூடாது, அதனை தடுத்து நிறுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை (20th May) 4 மணிக்கு பெரும்பான்மை இனத்தவர்களை அங்கங்கள ரஜ மகா விகாரயில்  ஒன்றுகூடுமாறு துண்டுப்பிரசுரம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

முஸ்லிம்களின் அஹதிய்யா பாடசாலைக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் சுமார் 2,3 ஆயிரம் மக்களை எதிர்பார்த்து பல பஸ்களை இலவச சேவையில் அமர்த்தியும் 200க்கும் குறைவானவர்களே வந்துள்ளனர். கூட்டம் நடைபெற்ற நேரத்தில் போலீஸ் பாதுகாப்பும் , பாதையில் ரோந்து நடவடிக்கையும் மிகவும் உஷார் நிலையில் இருந்ததனால் முஸ்லிம் தரப்பிற்கு பெரு வெற்றி அல்லது பெரும்பான்மையினரின் இலக்கில் பெரும் பின்னடைவு என்றே குறிப்பிடலாம்

அதேவேளை அஹதிய்யா பாடசாலைக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர்கள் ஒன்று திரள்கிறார்கள் என்ற தகவல்  பரவியதும் ஊள்ளுர் அரசியல் பிரமுகர்கள் இதுபற்றிய பல்வேறு தரப்பினரினதும் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அமைச்சர் ரவூப் ஹக்கீமும் இதுகுறித்து பாதுபாப்பு எயர் தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. Alhamdulillah.

    ReplyDelete
  2. al hamdulillah

    ReplyDelete
  3. May Allah Show Them Right Path.. Ameen...

    ReplyDelete
  4. singalavarkhalik nallavarkalum ulllanar.. sila nai kalin adavadich cheyal thaan idu.. allah vitkey nandri solla vendum

    ReplyDelete
  5. 2:103 அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்ககும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும். இதனை அவர்கள் அறிய வேண்டாமா?
    Meraan

    ReplyDelete
  6. இது நமக்கு வெற்றியென்று இறுமாப்புக் கொள்ளத் தேவையில்லை.நீரு பூத்த நெருப்பாக இன வெறியர்களின் மனதில்
    கனன்று கொண்டுதான் இருக்கும்.நாமனைவரும் ஒவ்வொரு விடயத்திலும் பொறுமையையும்,நிதானத்தையும்
    கடைப்பிடித்து நம் உணர்வுகளை அல்லாஹ்வுக்காக அடக்கி தொழுது துஆ கேட்போமாக.
    Daoud Tharik

    ReplyDelete
  7. வெற்றி தோல்வி என்று குறிப்பிடவேண்டாம் . இதுவே மதங்களுக்கிடையில் , இன துவேசத்தை வளர்க்கும் கருவாக அமைந்திவிடும் . நன்றி

    ReplyDelete

Powered by Blogger.