Header Ads



இலங்கையரை அச்சுறுத்தும் ஆஸ்மா


ஆஸ்மா நோயினால் நாளாந்தம் உலகளாவிய ரீதியில் 25:1 என்ற வீதத்திலும் இலங்கையில் 1,00,000 :4 என்ற ரீதியிலும் உயிரிழப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டாக்டர் எப்.ஆர்.மேத்தா தெரிவித்தார்.

உலக புகையிலை மறுப்பு தினம் இம் மாதம் 31 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுகாதாரம் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

அபிவிருத்தி அடைந்த அமெரிக்கா, கனடா, ஐரோப்பா நாடுகளில் சுவாச நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அதிகரிப்பு வீதத்திற்கு ஏற்ப இறப்பு வீதம் பெரும்பாலும் குறைவு. ஆனால் அபிவிருத்தியடைந்து வரம் இலங்கை போன்ற நாடுகளில் ஏற்படும் பாதிப்பை போன்றே மரண வீதமும் வேகமாக அதிகரித்து வருவதாக புள்ளி வி பரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

இதற்கு பிரதான காரணமாக இருப்பது  புகைப்பிடித்தலாகும். இதன் மூலம் ஏற்படும்  பாதிப்பை உணர்ந்தே  புகைப்பிடிப்பது . சாதாரண சிகரெட் ஒன்றில் நிக்கொட்டின் போன்று 6,000 இரசாயனப் பதார்த்தங்களின்   கலவை உள்ளது. இவை உடனடியாக மனிதனை பாதிக்காமல் சிறிது சிறிதாக மனிதனின் உயிரை பறிக்கக் கூடியவை.

இதேவேளை ஆஸ்மா நோயுடன்  கூடி பீனிஸம், தோல் கடி, வயிறு  நெஞ்செரிவு போன்ற நோய்களும் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகமாவே உள்ளது.  இலங்கையை பொறுத்தமட்டில் பெரும்பாலும் பஸ் தரிப்பிடம் போன்ற பொது இடங்களில் புகைப்பிடிப்பதால் புகைப் பிடிப்பவர்க்கு 20 சதவீதம் மட்டுமே பாதிப்பு. ஆனால் தூய்மையற்ற அந்த காற்றை சுவாசிப்பவர்களுக்கு 80 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படுவதாக வைத்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே இவ்வாறான அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு இவ் வருடம் புகைப்பிடித்தலை மட்டுப்படுத்தும் நோக்கில்  பாடசாலை மாணவர்களுக்கிடையே விழிப்புணர்வு செயற்பாடு  ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.