Header Ads



இது ஒரு அசிங்கமான செய்தி..! - கழுத்து சீவப்பட வேண்டியவர்கள்..!!

கல்கமுவ பகுதியைச்சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவி கர்ப்பமாகிய சம்பவம் நடைபெற்றுள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்கமுவ சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கடந்த 21ஆம் திகதி பெற்றோர், பிள்ளைகளைத் தெளிவுபடுத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டபோது கல்கமுவ பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆர்.என்.ராஜபக்‌ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

தந்தையினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 12 வயது சிறுமியே தாய்மை அடைந்துள்ளார். தாய், தந்தையர் பிள்ளைகள் குறித்து மிகுந்த விழிப்புடன் செயற்படவேண்டும்.

கல்கமுவ நகருக்கு கிராமகப் புறங்களிலிருந்து சனி, ஞாயிறு தினங்களில் அதிகளமான மாணவ, மாணவியர் தனியார் வகுப்புக்களுக்கு வருகின்றனர். இவர்களில் தனிமையில் இருக்கும் 7 – 8 ஜோடிகளை பொலிஸார் விசாரணை செய்கின்றனர். தனியார் வகுப்புக்கள் என்று கூறி பிள்ளைகள் இவ்வாறு கலாசார சீரழிவுகளை நோக்கிச் செல்கின்றனர். இதுகுறித்து பெற்றோர் மிகுந்த அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் ஆர்.என். ராஜபக்‌ஷ தெரிவித்தார்.
............................................................................................................................

தந்தையினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது மகள் தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார் என திஸ்ஸமஹாராம வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திஸ்ஸமஹாராம பெரலிஹல பகுதி பாடசாலையில் 10ஆம் வகுப்பில் கற்கும் இந்த மாணவி திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே இவர் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

இலங்கையில் சிறுவர்கள் மீதான பாலியல் வல்லுறவு புதிய கலாசாரமாக மாறிவிட்டது. 2006ஆம் ஆண்டில் 1,557, 2005 இல் – 2,824, 2010 இல் – 4,029 என சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தற்போதைய ஆட்சியில் 2006இல் 2,355 சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2010இல் அது 4,029ஆக உயர்ந்துள்ளது. 2000ஆம் ஆண்டைவிட 2010ஆம் ஆண்டுவரை 2,472 துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காலத்தில் ஒவ்வொரு நாளைக்கும் 11 சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அண்மையில் சமர்பித்த புள்ளிவிபரம் மேற்கூறிய தகவல்களை தெரிவித்துள்ளது.

ஆனால், தெரியவராத சம்பங்கள் இன்னும் எத்தனையோ? பதியப்படும் முறைப்பாடுகளைவிட பதியப்படாதவை அதிகமாக இருக்கலாம். ஆனால், எண்ணிக்கையை கூறுவது கடினம் என ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க குறிப்பிட்டார். 5 பேர் சம்பவத்தை வெளிப்படுத்தினாலும் 10 பேர் சம்பவங்களை மறைப்பதாக அவர் தெரிவிக்கின்றார். 2011இல் 346 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதில் 39 சம்பவங்களே முறையிடப்பட்டுள்ளன. பாலியல் குறித்து அறிந்திராத சிறுவர்கள் அதனை கண்டுகொள்வதில்லை.

இதுவரையில் 90 சதவீதமான சிறுவர்கள் தங்களால் நன்கு பழக்கப்பட்ட தந்தை, பாட்டன், சகோதரர், சித்தப்பா அல்லது ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தாய், தந்தை வெளிநாட்டுக்குச் சென்ற நிலையில் உறவினர்கள் வீட்டில் உள்ள தங்கியிருக்கும் சிறுவர்களும் அதிகம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சிறுவர்களில் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் இதன் மூலம் சீரழிகின்றன.

1 comment:

  1. உலகமுழுவதும் இருக்கும் சட்டங்களால் எந்த நன்மையுமில்லை.விசாரித்து தண்டனை கொடுத்து சிறையிலடைப்பதால் மக்களின் வரிப் பணம் தான் வீணாகிறது.உண்மை பேசும் சாட்சிகளைக் கொண்டு விசாரித்து இஸ்லாம் கூறும் தண்டனையை நிறைவேற்றினால்;99.99 வீதம் குற்றங்கள் குறையும்.
    Meraan

    ReplyDelete

Powered by Blogger.