Header Ads



சரத்பொன்சேக்காவின் தவறுகளுக்கு அமெரிக்காவே காரணம் - அமைச்சர் விமல் வீரவன்ச

gtn

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை தவறாக வழி நடத்தியத்தில் அமெரிக்கா சம்பந்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.  இதில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் பெரும் பங்களிப்பை செய்ததது எனவும் பொன்சேக்கா அமெரிக்கா சென்ற போது, மேலும் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதேவேளை சரத் பொன்சேக்கா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட பலர் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற இராணுவ வீடமைப்பு திட்டங்களை ஆரம்பித்து வைத்து, இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சரத் பொன்சேக்காவை பார்த்து அமெரிக்க தூதரகம் புன்னகைத்தது. இதன் பாதூரமான விடயம் என்னவெனில், அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னரே தன்னை ஜனாதிபதியாக நினைத்து கொண்டார். ஆரம்பத்தில் ரணில் விக்ரமசிங்கவை, பொன்சேக்கா சேர் என்றே அழைத்து வந்தார். பின்னர், அவரை ரணில் என அழைக்க ஆரம்பித்தார். பொன்சேக்கா ஜனாதிபதியாக தெரிவாகி இருந்தால் எப்படி அழைத்திருப்பாரோ தெரியவில்லை. சிலர் ரணிலின் ஜாதகம் சரியில்லை என கூறினாலும். அது அப்படியல்ல, பொன்சேக்காவினால் ரணில் தப்பித்தார்.

சரத் பொன்சேக்கா, இராணுவ தளபதி என்ற முறையில், விடுதலைப்புலிகளின் பயங்கரவாத்தை தோற்கடிப்பதில் விசேட பங்காற்றினார். இதற்கான கௌரவத்தை நாம் அவருக்கு தொடர்ந்தும் வழங்குவோம். எனினும் ஜனாதிபதியான முப்படைத்தளபதி ஆற்றி பணிகளை விட அதிகமான பணிகளை செய்தார் எனக் கூறமுடியாது. சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி போரை நிறுத்துமாறு கோரினால், எப்படி போர் செய்வது. ஜனாதிபதிக்கு வெளிநாடுகள் பாரிய அழுத்தங்களை கொடுத்தன. 

இதனை நாம் நன்கு அறிவோம். இந்த சர்வதேச அழுத்தங்களுக்கு அடிப்பணியாத காரணத்தினால், ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். இலங்கையில் இதற்கு முன்னர் ஆட்சி செய்த தலைவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை போன்ற தீர்மானங்களை எடுக்கவில்லை. இதனால் சரத் பொன்சேக்காவை விட, அரச தலைவர் என்ற முறையில் தீர்மானங்களை எடுத்து,  பயங்கரவாத்தை தோற்கடிக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமைத்துவத்தை வழங்கினார் எனவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார.

2 comments:

Powered by Blogger.