Header Ads



கொழும்பு கடையொன்றில் தொழுகை நடத்த தடை, அநுராதபுர பள்ளிக்கு அச்சுறுத்தல் கடிதம்

தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் சம்பவத்தையடுத்து நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக மேல மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான தெரிவித்துள்ளதுடன், தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இச்சதித் திட்டங்கள் தொடராமல் தடுத்திருக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு புறக்கோட்டை உரக வர்த்தக சந்தைப்பகுதியில் தொழில்புரியும் முஸ்லிம்கள் தொழுகைக்காக ஒரு கடையை பயன்படுத்தி வந்தனர். அங்கு தொழுகை நடத்துவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளையில் இயங்கிவந்த அல்குல்ஆன் மத்ரஸாவையும் மூடி விடுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அநுராதபுரம் மடாட்டுகம பள்ளிவாசலுக்கு அச்சுறுத்தல் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன. எனினும் அரசாங்கம் நேரடியாக தொடர்புபட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பின்நிற்கிறது எனவும் முஜீபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்,

4 comments:

  1. Assalamualikum..தெஹிவலயில் ஒரு மதரஸா அல்ல ...இது ஒரு மஸ்ஜித்...கடந்த ஒரு மாதமை அதனை மூட முயலுகின்றனர்...இது சம்மந்தமாக மேலதிக தகவல்காலுக்கு ... Area ரிப்போர்ட்டர்

    ReplyDelete
  2. muthukelumpu illaatha muslim arasiyal waathikalukku makkal samayam warum poathu nalla paadam karppikka weandum.

    ReplyDelete
  3. ivvaru sambavamgal thodarndu varum Mulimgal idarku mugam kudukka thayar aka vendum.

    ReplyDelete
  4. arsiyal vaathihalai kutram solli palanillai,ithu allah vin naatan ,arasiyal vaathi enbavan yar?manithanil oruwane ivanum illavittal irukirathum illathu poi vidum,naam ewwalavu thooram islathai vittum vilahi selkiramo awwalawukku emaku kastangal warum.nam inru oru islamiyanai polawa nadanthu kolhirom...ippadi oru msg parthu vittu nallawanai pol feedback podufavarhal eththanai asingangalai seihirarhal theriuma.allah oruwanai thawira ewaralum emmai kaapatra mudiyathu.muthalil ullaththai suththam seithu unmayana muslimaha nadaththael kkatungal allah paathuhapan

    ReplyDelete

Powered by Blogger.