Header Ads



மாணவர்களின் கனவுகளுக்கு அரசாங்கம் தடைபோடுகிறதாம் - ரணில் சொல்கிறார்

நாட்டில் கிராமிய மற்றும் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, உயர் நிலை பாடசாலைகளுக்கு சென்று கல்வி பெறும் வாய்ப்புகள் அரசாங்கத்தினால் தடுக்கப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் இன்று ஆற்றிய விசேட உரையொன்றின் போதே இந்த விடயத்தை முன்வைத்தார். இதன்காரணமாக, மாணவர்கள் தமது எதிர்கால கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.