Header Ads



இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கனடா, தாய்வான் நாடுகளுக்கு சோளம் ஏற்றுமதி

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக சோளம் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக ஆயிரம் மெற்றிக் தொன் சோளம் எதிர்வரும் 22 ஆம் திகதி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சோளமானது கனடா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. வருடத்திற்குள் 10 ஆயிரம் மெற்றிக் தொன் சோளத்தினை ஏற்றுமதி செய்ய இணக்கம் காணப்பட் டுள்ளது. இதன்படி, முதற்கட்டமாக எதிர்வரும் 22 ஆம் திகதியன்று தாய்வானிற்கு 1000 மெற்றிக் தொன் சோளம் ஏற்றுமதி செய்யப்படுமெனவும் சங்கத்தின் தலைவர் சாதிக்கீன் கூறினார்.

அநுராதபுரம் மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளிலேயே பெரும்போகத்தின் போது கூடுலான சோளன் விளைச்சல் காணப்படுகிறது. சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளிடையே இம்முறை பெரும்போகத்தின் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மெற்றிக் தொன் சோளத்தினை உற்பத்தி செய்யக் கூடியதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இருந்த போதிலும் எதிர்பாராத வித மாக எமக்கு இம்முறை 2 ஆயிரம் மெற்றிக் தொன் சோளம் அறுடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய பாரிய சோள அறுவடை கிடைத்துள்ளமை இலங்கை வரலாற்றிலேயே முதன் முறையாகுமெனவும் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.



No comments

Powered by Blogger.