Header Ads



அஹதியா பாடசாலைக்கு எதிராக சிங்கள கடும்போக்காளர் அணிதிரள்வு - பதட்டம் தொடருகிறது (update)




ரவூப் ஹஸீர்

தம்புள்ள பள்ளிவாயளுக்கு நேர்ந்தது போலவே குருனாகலுக்கு அண்மையில் உள்ள ( சுமார் இரண்டே கி.மீ ) ஆரிய சிங்கள வத்த என்கிற பிரதேசத்தில் ஒரு பதட்டமான சுழ்நிலை உருவாகி வருவதாக  மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா குறிப்பிடுகிறார். இவ்வூர் வாணி வீதி என்று தமிழில் அழைக்கப்படுகிறது .

அவர் மேலும் கூறியவை,

அஹதியா பாடசாலை நடத்துவதற்கு மட்டுமே முஸ்லிம்களுக்கு அனுமதி, அங்கு தொழுகை நடாத்தக்கூடாது என்று ஊர்பிரமுகர்களை , விகாரைக்கு அழைத்து வழக்கரிஞ்ஞர் முன்னிலையில் கையொப்பம் வாங்கிய செய்தி ஏற்கனவே அனைவரும் அறிந்ததே . இது நடந்து சில தினங்கள் ஆகிறது .

ஆனால் நேற்று திரும்பவும் குருநாகல் பிரதேச சிங்கள கிராமங்களுக்கு " ஆரிய சிங்களவத்தையில் முஸ்லிம்கள் பள்ளி கட்டுவதாகவும் , அதனை தடுத்து நிறுத்துவதட்காக இன்று ( 20th May ) 4 மணிக்கு பெரும்பான்மை இனத்தவர்களை - அங்கங்கள ரஜ மகா விகாரயில்- ஒன்றுகூடுமாறும் " பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்களை சீண்டிவிட இனவாதிகள் எடுக்கும் இம் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எப்படி கையாள்வது என்பது சம்பந்தமாக நேற்று இஷா தொழுகைக்குப் பிறகு தெளியாகொன்ன பெரிய பள்ளிவாயலில் ஒரு ஒன்றுகூடல் நடந்தது.

அப்போது கத்தார் செல்வதற்காக விமான நிலையத்தில் இருந்த அமைச்சர் ரவுப் ஹகீமுக்கு தொலைபேசியில் ரிஸ்வி ஜவஹர்ஷா நிலைமைகளை விபரித்தவுடன் , போலீஸ் மா அதிபர் - பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுடன் ஹக்கீம் தொடர்புகொண்டு வேகமாக இயங்கியுள்ளார்.

இதன் பயனாக இரகசியப் போலீசார் உடனடியாகவே ( இஷாவிட்குப் பிறகு கூட்டம் நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே ) குறிப்பிட பிரதேசத்திற்கு விஜயம் செய்து விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
ரிஸ்வியிடமிருந்து தற்போது கிடைத்த செய்தி இப்போது சுமார் 25க்கும் மேற்பட்ட போலீசார் அஹதியா பாடசாலை அமைந்துள்ள வளவில் காவல் பணிகளில் உள்ளனர் . பன்சலையில் மாலை நடைபெறவிருக்கும் கூட்டத்தை தவிர்க்கிற முயற்சியில் பாதுகாப்பு படையினர் கவணம் செலுத்துகின்றனர் .மீண்டும் ஒரு இனமுறுகல் உருவாகாதிருக்க நாம் துஆ செய்வோம்

4 comments:

  1. Let eastern Muslims show their support to the government further and let us suffer !!!
    This is not good and its nothing more than a rubbish
    where is Jamiyatul Ulama??? they know to keep silent, talk like saints and when people question them, they know to say "We fight with no violence"
    there are lot more to face .. let the foolish leaders wake up at least now !!!

    ReplyDelete
  2. mahir paris1620/05/2012, 16:30

    இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக நடாத்தக்கூடிய சம்பவங்களுக்கு காரணம் முல்லிவைக்கால் வெற்றிதான் அந்த திமிர்தான் இவர்களுக்கு

    ReplyDelete
  3. இனிமேலாவது இஸ்லாத்தை உலகமயமாக்க முயற்சிப்போம்.நமக்கு நாமே நன்மையை மட்டும்சொல்லிக் கொண்டிருக்காமல் மாற்று மதத்தவர்களுக்கும் எத்தி வைப்போம் .
    Meraan

    ReplyDelete
  4. எதிர்வு கூறல் :::
    இலங்கை முஸ்லிம்கள் எதிர்காலத்தில் இன்னுமோர் முல்லிவைக்காலை சந்திக்க நேரலாம் வல்ல அல்லாஹ் காப்பாற்றுவான் ஆனால் அதுதான் எமக்குத்தேவை என முஸ்லிம் சமூகம் அடம்ம்பிடித்தால் அல்லாஹ்வின் சோதனை வந்தே தீரும் ... அதாவது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் பிரதேசவாதம், இயக்கவாதம், அரசியல் பிளவு தலைமை இல்லாமை போன்ற ஒற்றுமையற்ற போக்கு இன்று பாசிசப்புளிகளாலும் பேரினவாத அரசாலும் நன்கு உணரப்பட்டு அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்துள்ளது, அதன் ஒரு சில விளைவுகளே இவ்வாறான தம்புள்ளை, காணி அபகரிப்பு, கொழும்பிலிருந்து முஸ்லிம்களை துடைத்தல்,முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம்,சிருபான்மையற்ற ஒரு ஹம்பண்டோடையை தலைநகராக உருவாக்கல், வெற்று நிலங்களை ராணுவ முகாம்கலாக்குதல், பள்ளிகள் கட்ட அனுமதி மறுத்தல், மற்றும் பௌத்த விகாரைகளை வடக்கு கிழக்கில் விரிவாக்குதல், புண்ணிய பூமிகளை ஆண்டுதோறும் பிரகடனப்படுத்துதல் போன்ற பல பயங்கர நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவே முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுங்கள் உங்களைவிட உயரிய சக்தி, சமூகம் இவ்வுலகில் இல்லை இதுவே வேத வாக்கும் கூட ... அல்லாஹு அக்பர் -4 comments: aboooumar@gmail.com

    ReplyDelete

Powered by Blogger.