Header Ads



கண்டியில் சரத் பொன்சேக்காவுக்கு பெரும் வரவேற்பு (படங்கள்)

ஜே.எம்.ஹபீஸ்

விடுதலையான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் கண்டியில் அமோக வரவேற்பளித்தனர்.

(22.5.2012) புனித ஸ்ரீ தலதா மாளிகையைத் தரிசித்து மதக் கிரிகைகளில் ஈடுபடவும், மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்த்தேரர்களை சந்தித்து நல்லாசி பெறவும் அவர் Aவிஜயம் செய்தார்.

கண்டிக்கு வருகை தருவதைக் கேள்வியுற்ற கண்டிப் பிரதேச மக்களும் ஆதரவாளர்களும் ஆயிரக்கணக்கில் குழுமி விட்டனர். பி.ப.3 மணி முதல் 6 மணி வரை கண்டி, மணிக் கூண்டுக் கோபுரம் முதல் தலதா மாளிகை வரையான தலதா வீதியின் இரு மருங்கிலும் குழுமி இருந்தனர்.

கடுகண்ணாவை முதல் கண்டி வரை பல்வேறு .டங்களில் அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. திறந்த வாகனத்தில் அவர் கையசைத்த வண்ணம் சென்றார்.

பி.ப. 6.30 மணியளவில் தலதா மாளிகையை அடைந்த அவர் அதன் பின் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களைத் தரிசித்து நல்லாசி பெற்றார்.






No comments

Powered by Blogger.