தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தை ஐ.நா சபையிடம் முறையிடுகிறதாம் இந்து மத அமைப்புக்கள்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் வழிபாட்டுத் தலங்களையொட்டிய பிரதேசங்களிலும், தனியார் காணிகளிலும் அத்து மீறிப் பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு எதிராக ஐ.நா. சபையிடம் முறைப்பாடொன்றைச் சமர்ப்பிக்கும் முயற்சியில் இந்து மத அமைப்புக்களும் தமிழ் புத்திஜீவிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசின் ஆசிர்வாதத்துடன் அத்துமீறி அடாத்தாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையீடு செய்வதற்கான முன்முயற்சிகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது.
தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இந்த அப்பட்டமான மத உரிமை மீறல்கள் குறித்துப் பல்வேறு மட்டங்களிலும் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களுக்கு நீதியான பதில் கிட்டாத காரணத்தினால் இவ்வாறு ஐ.நாவிடம் நீதி கேட்பதெனத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கமைய, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்களை இந்துமத அமைப்புகளும், தமிழ் உணர்வாளர்களும் தயார் செய்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டனிலுள்ள பிரபலமான சட்டத்தரணிகள் ஊடாக ஐ.நாவிடம் இந்த முறைப்பாட்டைச் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக அகில இலங்கை இந்துமாமன்ற வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது, வடக்கு, கிழக்கில் ஆலய காணிகளில் படையினர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, தம்புள்ள பள்ளி வாசல் விவகாரம் ஆகியன உட்பட்ட பல்வேறு விடயங்கள் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டப்படவுள்ளதாக இந்துமாமன்ற வட்டாரங்கள் மேலும் கூறின.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தின்போது இலங்கை அரசிடம் ஐ.நா. கேள்வி எழுப்பக்கூடிய வகையில் இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரியவருகிறது.

முஸ்லீம்கள் எச்சரிக்கியாக இருக்க வேண்டிய தருணம்.
ReplyDeleteஇவர்கள் முஸ்லிம்களையும், அனைத்து சிங்களவர்களையும் பிரித்துவிட முயல்பவர்கள்.
தமிழர் தாயகம், சிங்களவர் தாயகம் என்றெல்லாம் இலங்கையை பிரிக்க முடியாது. அப்படியன்றால் முஸ்லீம்களுக்கு எது தாயகம்?
இலங்கை என்பது நம் அனைவருக்குமான தாயகம் என்பதை உரத்துச் சொல்வோம். இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் எல்லோர்க்கும் சம உரிமையே உள்ளது.
வெள்ளவத்தையும், காளியும், கதிர்காமமும் தமிழர் தாயகம? நாட்டை பிர்த்து இனவாதத்தை வளர்த்து, அதில் குளிர் காய சில சக்திகள் இரு தரப்பிலும் முயல்கின்றன,
நடுவில் மாட்டி விறகுக் கட்டைகள் ஆகப் போவது முஸ்லிம்களே. ஆகவே, கவனமாக இருப்போம்.
ஆடு நனைகிரதென்று ஓஓநாய்ய்?
ReplyDeleteரொம்ப கவனம் நாநா மார்கலே
யாழ் குருவி
இந்து மத அமைப்புகளே முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இலங்கைல் விடுதலைபுலிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டுழியங்கள் கொலைகள் கொள்ளைகள் பள்ளிவாசல்களை அளித்தது போன்றவைகளுக்காக உங்கள் அமைப்புக்கள் கட்சிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு தீர்மானத்தை நிறைவேட்ட்ருங்கள் பார்போம் அதன் பின் இலங்கை முஸ்லிகளை பற்றி யோசியுங்கள்
ReplyDeleteஇந்து மத அமைப்பால் மட்டக்களப்பில் ஆக்கிறமிக்கப்பட்டுள்ள கள்ளியம் காடு பிர்தௌஸ் பள்ளிவாசலை எந்த ஐ நா சபையிடம் முறையிடுவது
ReplyDelete