Header Ads



வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் ஒருவர் ஒரே டிக்கட்டில் நாடு முழுவதும் செல்ல வசதி

கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்ததும், வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவர் நாட்டின் எந்தப் பாகத்திற்கு செல்ல விரும்பினாலும் ஒரே டிக்கட்டில் அவர்கள் விரும்பிய பகுதிக்குச் செல்ல முடியும். அதற்கேற்ற வகையில் இலங்கையின் உள்ளூர் விமான சேவைகளும் தரமுயர்த்தப்படும் என்று  சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார்.

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள விமான நிலையம் திறந்து வைக்கப்படும் நாளிலிருந்து விமான சேவைகளை வழங்க பல விமான சேவை நிறுவனங்கள் முன்வந்தி ருப்பதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார். இவ்விமான நிலை யத்தின் 70 வீதமான நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதுடன், விரைவில் அது திறந்துவைக்கப்படவுள்ளது.

இந்த விமான நிலையம் திறந்துவைக்கப் பட்டதும் இதன் ஊடாக 40 வீத பயணிகள் சேவையும், 60 வீத பொதிகள் சேவையும் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் பூர்த்தியடைந்ததும் இதன் ஊடாக ஒரு மில்லியன் பயணிகள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கின் றோம்.

No comments

Powered by Blogger.