வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான மன்னார் ஆயரின் சாபம் பலிக்குமா..?
மூன்று தசாப்த கால ஆயுதப்போராட்டம் போதும் போதும் என்னும் அளவிற்கு அழிவுகளையும் அவலங்களையும் அள்ளிஅள்ளி தந்திருக்கிறது. அந்தவிடயத்தில் யுத்தம் சாதி,மத பேதம் ஏதும் காட்டவில்லை.அதே போல யுத்தம் மொத்தமாகவும் சில்லறையாகவும் வேறு தவணையடிப்படையில் உயிருடைமைகளை பறித்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குள் ஏகமனதாக ஒரு கருத்து இருந்ததென்றால் அது, தாயகத்தில் மீள்குடியேறும் தாகம் ஒன்றுதான்.
குறிப்பாக வடமாகாண முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் 1990 புலிகளால் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டதில் இருந்து இன்றுவரை அதன் கோரவடுக்களை சுமந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உடைமைகள் அனைத்தும் சூறையாடப்பட்டு வெறுங்கைகளுடன் விரட்டப்பட்ட போதும்,நாடெங்கும் அகதிகளாக வாழ்ந்து பல்வேறு மனஅழுத்தங்களை எதிர்கொண்ட போதும்,அவர்களது தாயகநினைவும் மீள்குடியேற்றக்கனவும் தன்னம்பிக்கையோடு அவர்களை வாழவைத்திருக்கிறது.
கொடிய யுத்தமும் முடிந்த கையோடு தமிழ்தேசியவாதத்தின் அத்தனை கொடிய முகமும் ஒழிந்தது.என வடக்கில் மீள்குடியேறப்போன முஸ்லிம்களுக்கு பிரச்சினை இப்போது ஆயர்வடிவில் வந்திருக்கிறது.
புலி சிதைத்த வாழ்வைச் சுமந்துதிரியும் மக்களுக்கு மீள்குடியேறுவதில் ஏற்படுத்தப்படும் திட்டமிட்ட சதியானது,மாடேறிமிதித்த கதையாகியிருக்கிறது. 'நிலம் எமது. வீடு உமது. தூக்கிக் கொண்டோடும்.'என்ற அகங்காரம் பேச யாரும் இல்லை என்ற போதிலும் மன்னார் ஆயரின் கூற்றுக்கள் மீள்குடியேறப்பொன முஸ்லிம்களுக்கு வெந்தபுண்ணில் வேல் எறிந்து கொண்டிருக்கின்றன.
மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் அன்மைக்காலமாக தம் சொந்த நிலத்தில் மெல்ல மெல்ல மீள்குடியேறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால்,கிணறுவெட்டப் பூதம் வெளிப்பட்ட கதையாக மன்னார் ஆயர் நாளுக்கொரு அறிக்கை வெளியிடத்தொடங்கியுள்ளார்.
ஆதிகாரிகள்,அரசியல்வாதிகள் போன்றோரை விஞ்சும் அளவுக்கு அரசகாணிகளின் மீது ஆயருக்கு அதீதபற்றுவந்திருக்கிறது. 'மன்னார் மாவட்டத்தில் அடாவடித்தனமாக அரசகாணிகளில் முஸ்லிம்கள் குடியேறுவதை எதிர்க்கின்றேன்' என ஆயர் வெளியிட்ட கோசத்தை13.05.2012ஞாயிறு பத்திரிகை ஒன்று தலைப்புச் செய்தியாக்கியிருக்கிறது. மற்றும் சில இணையத்தளங்களும் இதில் ஆர்வம்காட்டியிருக்கின்றன.
அதாவது, முஸ்லிம்கள் காடுகளை வெட்டித்துப்பரவாக்கியதைக் கண்ட போதே ஆயரது அரசகாணிமீதான அக்கறை பீறிட்டிருக்கிறது.ஒரு வகையில் ஆயருக்கு அக்காடு அரசகாணியாகத்தெரிந்ததில் ஆச்சரியமில்லைத்தான். பாவிக்கப்படாத அரச காணியும் அப்படித்தான் இருக்கும்.அதேநேரம் காடாகக் காட்சியளிக்கும் அப்பிரதேசமானது,அம்மரங்களின் ஆழஅடியில்(பாரதி பாணியில்)எந்தையும்தாயும் மகிழ்ந்துகுழாவி இருந்த பூமியென்பதுவும் ஆயர் அறியாததல்ல.ஏனெனில் முப்பதுவருட யுத்தவரலாற்றில் ஆயரின் இடம் தனித்துவமானது.
புலிகளால் சூறையாடப்பட்டு பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட சில நாட்களிலேயே வீட்டின்பாகங்கள் பெயர்த்தெடுத்துக் களவாடப்பட்டமை ஒன்றும் ரகசியமில்லை.அரசகாணிகளைப்பாதுகாக்கும் அதிகாரம் ஆயருக்கில்லையெனினும்,வீடுடைத்துக் கொள்ளையிடப்படுவதைத் தடுத்திருந்தருக்கக்கூடிய தார்மீகப் பொறுப்பு ஆயருக்கிருந்தது. மட்டுமல்லாது,மீள்குடியேறப்போன போது சில முஸ்லிம்களது காணிக்குள் தமிழ்மக்கள் ஆயரின்பாணியில் சொல்வதானால்,அடாவடியாக இருந்து கொண்டு எழும்பமாட்டோம்'என்றும்,பத்தாண்டுகள் தாண்டினாலே அது தமக்கு சொந்தமாகிவிடும் என்றெல்லாம் தமிழ்தேசியவாதம் பேசியதெல்லாம் யாவரும் அறிந்ததே.
சன்னார்பிரதேசத்தில் முஸ்லிம்கள் குடியேறப்போனபோது, அதன்முற்பகுதியில் 147 தமிழ்க்குடும்பங்கள் பலாத்காரமாக குடியுறியிருந்தனர். எனினும் அதனை விட்டுக்கொடுத்துவிட்டு முஸ்லிம்கள் பிற்பகுதியில் குடியேறவேண்டிய நிலை ஏற்பட்டமை ஆயருக்கு அறியக்கிடைக்கவில்லைப்போலும். அதே நேரம் நானாட்டான் அளவக்கைபிரதேச முஸ்லிம்கள் அங்கு குடியேறப்போன போது, அங்குவிரைந்த ஆயரவர்கள் 'அங்கு யாரும் குடியுறக்கூடாது மீறிக்குடியேறினால் சாபமிடுவேன்'என எச்சரித்துச்சென்றதை அம்மக்கள் இன்றும் நினைவுகூருகிறார்கள்.
நானாட்டான் அச்சங்குளம்,நொச்சிக்குளம் போன்ற பிரதேசத்தில் மீள்குடியேறி, மரங்களின் கீழ் குடியிருந்து கிடுகுகளைச்சாத்தி இருப்பிடம் அமைத்துக்கொண்டு அல்லல் பட்ட 108முஸ்லிம்குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் நிறுவனம் வீடு கட்டிக்கொடுக்க முன்வந்த போது அதனை எதிர்த்து மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்து இறுதியில் அவ்ஏழைகளுக்கு கிடைக்கவிருந்த இல்லிடத்தை இல்லாமலாக்கிய கைங்கரியத்தைச்செய்து புண்ணியத்தைக்கட்டிக்கொண்ட ஆயரவர்கள் இப்போது,முஸ்லிம்கள் அரசகாணிக்குள் குடியேறுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பதானது எல்டிடியின் முஸ்லிம் விரோதச் செயலுக்கு மில்லிகிராமும் குறைவானசெயலல்ல. எனவே உயிரிழந்து உடமையிழந்து சொந்த நிலமும் இழந்து போன முஸ்லிம்கள் எங்கெல்லாமோ அலைந்து தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.வடக்கே அவர்களை வாஞ்சையுடன் வரவேற்க ஆயிரம் ஆயிரம் நல்லுள்ளங்கள் காத்திருக்கின்றார்கள்.ஆதலால் அவர்கள் உங்களிடம் இருந்து உபத்திரவம் எதனையும் இனிமேலும் எதிர்பார்க்கவில்லை.அதேநேரம் ஆயர் அவர்களே! ஒருபானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதமாக உங்களை முஸ்லிம்கள் பார்க்கவும் இல்லை. என்பதை இங்கு சொல்லிவைக்கின்றேன்..!

காகம் திட்டி மாடு சாகுமா?
ReplyDeleteஒருவரை சபிப்பது என்பது மனிதப் பண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது.
அதுவும் ஒரு மதக்குரு எடுத்ததெற்கெல்லாம் சபிப்பேன் என்று மனிதர்களை நிந்திப்பது, இந்த மதகுரு கொண்ட கொள்கையில் சந்தேகம் வரச் செய்கிறது.
அநீதிக்குட்பட்ட மக்களை சபிக்கும் இம்மதகுரு தன்னையே சபித்துக் கொள்கிறார்.
பழிப்பவர் நிச்சயம் பழிக்கப்படுவார்.
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பதுபோல் யாரும் தீண்டாமல் இருந்த ஆயரைப்பற்றி
ReplyDeleteஅடிக்கடி எழுதி பெரிய ஆளாக்க போவது போல் தெரிகிறது.அவர் நமக்கு செய்த துரோகங்களைத் தான் எழுதுகிறீர்கள்
என் மனதிற்கு பட்டத்தை எழுதினேன் .எழுதுபவர்களுக்கு சரியென்றுபட்டால் தொடர்ந்து அவரின் இஸ்லாமிய விரோத
செயல்களை அம்பலப்படுத்துங்கள் .
Meraan
சமூகங்களுக்கு மத்தியில் பிளவை உண்டு பண்ணி குளிர் காய நினைக்கும் இவர் (மன்னார் ஆயர்) போன்றவர்களை நிற்க வைத்து சுடணும், நாட்டில் இன்னொரு யுத்தம் ஏற்பட இதுபோன்றவர்கள் தான் காரணமாக இருப்பார்கள்!!!!
ReplyDeleteஆயர அவர்களே!!
மதங்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்க்க வேண்டியா தார்மீக பொறுப்பு உங்களுடையதே! எனவே மதன்களுக்கிடையில் (மக்களுக்கிடையில்) கசப்புனர்வுகளையும், குரோதத்தையும் வளர்ப்பதை விட்டுவிட்டு சமத்துவாதத்தையும் சகோதரத்துவத்தையும் வாளர்க்க பாடு படுங்கள்!!
மனிதர்களுக்குத் தான் நல்ல புத்தி சொல்லவேணும்.முகத்திலேயே தெரிகிறதே இன வெறி
ReplyDelete