Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம் வட்டாரத்தில் பெருமளவு காணிகள் விற்பனைக்கு..!

யாழ்ப்பாண முஸ்லிம் வட்டாரத்தில் 70 க்கும் மேற்பட்ட காணிகள் விற்கப்படவிருப்பதாக யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

இக்காணிகளை விற்க விரும்புபவர்கள் அதனை முஸ்லிம்களுக்கே விற்பதற்கு விருப்பம் கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து அவர்கள் காணிகளை வாங்க விரும்பும் முஸ்லிம் உறவுகளிடமிருந்து சாதக பதில் கிட்டுமெனவும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பான கலந்துரையாடலொன்றில் இந்த விவகாரம் ஆராயப்பட்டுள்ளது.

இவ்வாறு காணிகளை விற்க இருப்பவர்களின் விபரங்களை யாழ் முஸ்லிம் இணையத்தில் பிரசுரிப்பது என இங்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதன்போது குறிக்கிட்டுள்ள தனிநபர் ஒருவர் யாழ் முஸ்லிம் இணையத்தில் விற்கப்படவுள்ள காணிகளின் விபரங்களை பிரசுரிப்பதற்கு இணக்கமின்மையை தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த விவகாரமும் கைவிடப்பட்டுள்ளது.

புலம்பெயர் தேசங்களில் இருந்து யாழ் முஸ்லிம் இணையத்துடன் தொடர்புபேணும் பலர் யாழ்ப்பாண முஸ்லிம் வட்டாரத்தில் காணிகளை கொள்வனவுசெய்ய ஆர்வமாகவுள்ளதாக எம்மிடம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் தமது காணிகளை விற்கவிரும்புபவர்கள் அல்லது அதுபற்றிய விபரங்களை பகிரங்கப்படுத்த விரும்புபவர்கள் எம்முடன் தொடர்புகொள்வார்ளாயின் அவர்களுக்கு எமது சமூகத்தின் நலன்கருதி உதவுவதற்கு நாம் தயார்நிலையில் உள்ளோம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்..!!

தொடர்புகளுக்கு - jaffnamuslim1990@yahoo.com

2 comments:

  1. யாருக்கு விற்றாலும் பரவாயில்லை, வாங்குபவன் யூதன் என்றாலும் பரவாயில்லை, கொமிசன் கிடைத்தல் சரி
    என்ற நிலையில் செயல்படும் முஸ்லிம் காணித்தரகர்கள் குறித்து கவனம் செலுத்தவும்.

    இவர்களுக்கு அறிவுரை சொல்வதனாலோ, ஆலோசனை வழங்குவதனாலோ இல்லை எச்சரிப்பதனலோ எந்தப் பயனும் ஏற்பட்டு விடப் போவதில்லை. இதுதான் கடந்த கால நடவடிக்கைகள் சொல்லும் உண்மை.

    யாழ்ப்பாணம் சொனகதேருவில் காணி வாங்க ஆசைப்படும் செல்வந்த முஸ்லிம்கள்,இப்பொழுது உடனடியாக காணி வாங்குவதனை விட, அந்தப் பணத்தில் ஒரு பகுதியை எல்லோருமாக சேர்த்து, இந்த சமூக அக்கறை அற்ற காணித்தரகர்களுக்குக் கொடுத்து, அவர்களை யாழ்ப்பாணத்தை விட்டு மட்டும் அல்ல, இந்த நாட்டை விட்டே வேறு எங்காவது தொலை தூரத்திற்கு அனுப்பி வைத்தால் அதுவே யாழ்ப்பாண முஸ்லீம்களுக்கும், இலங்கை முஸ்லீம்களுக்கும் செய்யும் மிகப் பெரிய சேவையாக இருக்கும்.

    ReplyDelete
  2. முதன் முதலில் காணி விற்றவர் கட்டிட வேலை செய்து கொடுக்கும் ஒப்பந்தகாரர்ராக இப்பொழுதும் சோனக தெருவில்
    வளம் வந்து கொண்டுதான் இருக்கிறார் .
    Meeraan

    ReplyDelete

Powered by Blogger.