Header Ads



எகிப்தில் சாதனை படைக்கும் இலங்கை மாணவன் (படங்கள்)

அல்ஹாபில் எல்.எம்.முபீத் (நத்வி )
மௌலவி அல்ஹாபில் எல்.எம்.முபீத் அவர்கள் சீனிக்கண்டு லாபீர் முஹம்மது மஸ்தான் துல்ஹா உம்மா தம்பதியினரின் மூன்றாவது மகனாக மூதூர் நொக்ஸ் வீதியில் 1980- 05- 02 ஆம் திகதி பிறந்தார் .தனது ஆரம்பக்கல்வியை தி / மூதூர் மத்திய கல்லூரியில் கற்றார் . பின்னர் 1991 ஆம் ஆண்டு மூதூர் நத்வதுல் உலமா அரபுக்கல்லுரியில் ஹாபில் (குரான் மனன)ப் பிரிவில் இணைந்து அக்கல்வியை மூன்று வருடங்களில் சிறப்பாக நிறைவு செய்ததன் பின்னர் 1995ஆம் ஆண்டு கிதாபுப் பிரிவில் (ஷரியா பிரிவில் ) இணைந்து கொண்டர் .

 நத்வதுல் உலமாவில் கற்றுக்கொண்டிருந்தவாறே 1999 ஆம் ஆண்டு க . பொ . த சாதாரண தரப்பரீட்சையில் திறமைச் சித்தியை பெற்ற இவர் 2000 ஆம் ஆண்டு எகிப்திலுள்ள அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் தனது உயர் கல்வியை தொடர்வதட்கு பயணமானார் .

 அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தில் இடம் பெற்ற உயர்தர பரீட்சையில் திறமை சித்தியை பெற்று Islamic law and international Islamic law எனும் பீடத்தில் இணைந்து கற்றதன் மூலம் தனது இளமாணி பட்டத்தை (B A )பூர்த்தி செய்தார் .அத்தோடு தனது கல்வி தேடலை முடித்து விடாமல் மீண்டும் 2008 மற்றும், 2009 காலப்பகுதிகளில் இஸ்லாமிய அரசியல் துறையில் இணைந்து முதுமாணி (MA) பட்டத்தை பெற்றதோடு 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இஸ்லாமிய அரசியல் துறையில் (M.PHIL) பட்டத்தை நிறைவு செய்து சிறப்பு சித்தியும் பெற்றார் .

 இவ்விரண்டையும் பூர்த்தி செய்ததன் மூலமாக மூதூரிலிருந்து வெளிநாட்டு பல்கலைகலகங்களுக்குக் கல்வி பயில சென்றவர்களுள் இஸ்லாமிய அரசியல் துறையில் முதுமாணி பட்டத்தை பெற்ற முதலாமவர் என்ற பெருமைக்குரியவராகுறார் . மௌலவி எல் .எம் .முபீத் இவர் தனது முதுமாணி பட்டத்துக்கென தொகுத்த 400 பக்கங்களை கொண்ட அரபு மொழியிலான நூலொன்றின் பிரதி தற்போது நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 தற்போது இஸ்லாமியப் பொருளாதார “ISLAMIC ECONOMIC” துறையில் கலாநிதி பட்டத்தை (PH.D) முடிபதட்காக அல் அஸ்ஹர் பல்கலை கழகத்துக்கு பயணமாகியுள்ளார் . அரபுமொழியில் “ அரபுகளின் தவறை விட உன் தவறு குறைவுதான் “ என்ற அல் அஸ்ஹர் பல்கலை கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்களின் புகழை பெற்ற அன்னாரின் கல்விப்பயணம் மென்மேலும் சிறப்புற எல்லாம்வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக .

உதவி ஹபீபுல்லா பாயிஸ்

3 comments:

  1. மௌலவி முபீத் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. பேராசிரியர் தீன் முஹம்மத், பேராசிரியர் மஃரூப், கலாநிதி அஷ்ரப் போன்றவர்களையும் இவ்விடத்தில் நினைவு கூறலாம். இவர்களும் இலங்கையில் இருந்து சென்று அல்-அஸ்ஹரில் கலாநிதிப்பட்டத்தை பெற்றுக்கொண்டவர்களே.

    ReplyDelete
  2. "Mabrook" Brother Mufeeth

    ReplyDelete

Powered by Blogger.